பெரம்பலூரில் 10வயது சிறுவனுக்கு எமனாக மாறிய மின் கம்பி - திருச்சி சிறுகனூர் அருகே மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசபட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாலிபர் - மின்சாரத்துறையும் காரணமே - www.livecid.in_CRIME NEWS GALLARY

User 1
0
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் கவியரசன் (வயது 10). சிறுவன் கிளியூர் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் அவரது வீட்டின் அருகில் உள்ள செல்வராஜின் வீட்டிற்கு மின் கம்பத்தில் இருந்து மின்சார சர்வீஸ் ஒயர் சென்றது. இந்த ஒயர் நீண்ட தூரம் சென்றதால் தாழ்வாக தொங்கிக்கொண்டு இருந்தது. இதனால் அந்த ஒயர் தொங்காமல் இருக்க இரும்பு குழாயால் முட்டுக் கொடுத்துள்ளனர்.தற்போது மழைக்காலம் என்பதால் ஒயரில்  மின்சாரம் கசிவு ஏற்பட்டுள்ளது . இந்த மின்கசிவு முட்டு கொடுக்கப்பட்டிருந்த இரும்பு குழாயில் பாய்ந்தது.
இதை அறியாத கவியரசன் நேற்று அப்பகுதியில் விளையாடியபோது இரும்பு குழாயை தொட்டுள்ளான். இதனால் குழாயில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் கவியரசன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதுகுறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கவியரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து  குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன்  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

திருச்சி மாவட்டத்தில் சிறுகனூர் பகுதியை ஒட்டிய வாழையூர் கிராமத்தில் மின் கம்பத்தில் ஏறிய வாலிபர் மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசபட்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினார்..
இது குறித்து ஊர்பொதுமக்கள் கூறியது என்னவென்றால் மண்ணச்சநல்லூர் தாலுகாவிற்க்கு உட்பட்ட வாழையூர் கிராமத்திற்க்கு மின்சாரதுறை சார்பில் எந்த பணியாளரும் மின்கம்ப பழுது பார்பதற்க்கு  வருவதில்லை . அவர்களுக்கு போன்செய்தால் சரியான பதில் அளிபதும் கிடையாது. இதனால் ஊரில் குறிபிட்ட நபர்கள் மின்கம்ப பழுது சரிசெய்து வந்தனர். இந்நிலையில் 30.10.2021 மதியம் மின் கம்பத்தில் ஏறியபோது பிரபு என்ற வாலிபர் மிசாரம் தாக்கி கீழே விழுந்தார் உடனே 108 அவசர ஊர்தி மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் நடப்பதற்க்கு மின்சாரதுறையும் ஒரு காரணமே.

தொகுதி சட்டமன்ற உறுப்பினரகள் மக்களின் அடிப்படை வசதிகளை தீர்த்து வைத்தால் இதுபோன்ற சம்பவம் குறையும்....
www.livecid.in

Chief Reporter
Mr.prasanth.s

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !