கோவை:
கோவை மாவட்ட காவல்துறையினர், கருமத்தம்பட்டி பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக போதை மாத்திரை மற்றும் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த 3 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 200 போதை மாத்திரைகள் மற்றும் 1.100 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
Dr. K. கார்த்திகேயன், இ.கா.ப., கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், மாவட்டத்தில் குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறையினருக்கு தொடர்ச்சியாக அறிவுரைகள் வழங்கி, சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, இன்று (30.12.2025) கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கருமத்தம்பட்டி காவல் நிலைய காவல்துறையினர் சென்னி ஆண்டவர் கோவில் அருகே தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சட்டத்திற்கு விரோதமாக போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததாக,
உதய பிரகாஷ் (22)
(தங்கப்பாண்டி மகன், திருப்பூர்)
சூரிய பிரகாஷ் (23)
(ஆறுச்சாமி மகன், திருப்பூர் மாவட்டம்)
சுரேந்தர் (22)
(சீனிவாசன் மகன், திருப்பூர் மாவட்டம்)
என்ற மூன்று நபர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 200 போதை மாத்திரைகள் மற்றும் 1.100 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் மூவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
⚠️ காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை
போதைப் பொருட்கள் விற்பனை அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிரான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் Dr. K. கார்த்திகேயன் அவர்கள் எச்சரித்துள்ளார்.
📞 பொதுமக்களுக்கு அறிவிப்பு
போதைப் பொருள் விற்பனை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் குறித்து பொதுமக்கள் தயங்காமல் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம்.
☎️ கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை: 94981-81212
📲 WhatsApp: 77081-00100
👉 தகவல் வழங்குவோரின் அடையாளம் முழுமையாக ரகசியமாக காக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
www.livecid.in Crime News Gallery
Tamil Crime News Portal
www.livecid.com - India Trending News - India Crime News Portal - A company that tells the truth as it is.


