கல்ல காதலன் கல்ல காதலியை கொலை செய்த சம்பவம் அருப்புகோட்டையை அதிரவைத்துள்ளது-பணம் தான் கொலைக்கு காரணம்-livecid.com(www.livecid.com)liveciddotcom
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஆத்திபட்டி அருகே உள்ள கட்டகஞ்சம்பட்டியை சேர்ந்தவர் திருமுருகன். பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி அங்காள ஈசுவரி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். அப்போது அங்கு வந்த அவருடைய தந்தை காளிமுத்து, உடனே அங்காள ஈசுவரியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்தது விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அங்காள ஈசுவரியின் உடல் பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
தனது மகள் மர்மமான முறையில் இறந்தது குறித்து காளிமுத்து, அருப்புக்கோட்டை தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அங்காள ஈசுவரிக்கும், அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த அடைக்கலம் என்பவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு பழக்கம் இருந்தது தெரியவந்தது. இருவரும் அவ்வப்போது ரகசியமாக சந்தித்து உல்லாசம் அனுபவித்துள்ளனர்.
இந்தநிலையில் அங்காள ஈசுவரி, கள்ளக்காதலன் அடைக்கலத்திடம் ரூ.2 லட்சம் வரை பணம் பெற்றதாகவும், அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அடைக்கலாம் பணம் கொடுக்க மறுத்தபோது நாம் இருவரும் உல்லாசமாக இருந்ததை உறவினர்களிடம் கூறப்பபோவதாக மிரட்டியுள்ளார்.
மேலும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அவர்களுக்குள் சமீப காலமாக பிரச்சினை இருந்தது. சம்பவத்தன்றும் இது குறித்து 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கள்ளக்காதலன் அடைக்கலம் ஆத்திரம் அடைந்து, அங்காள ஈசுவரியை கழுத்தை நெரித்துள்ளார்.
அதில் அங்காள ஈஸ்வரியின்உயிர்பிரிந்ததும் அடைக்கலம் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.இது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அடைக்கலத்தை கைது செய்தனர்.
----------------------------END-----------------------------------------------------------------------------------------
#trending,#liveciddocom,#livecid.com,#livecid,#world,#crimechannel,#CID,LiveCID,livecid,#LIVECID,#sony,ZEE,#007cid,#cid007,#cid,#buddha,#Prakash,prakash,crimechannel,#crimenewsking,#topcrime,#police,#cid,#dig,#citypolice,#TNpolice,#,