வலைதளங்களில் மனைவியை பகிர்ந்து பரிமாறிய காம கணவர்கள் - காலச்சார சீர்கேட்டில் கேரளம் - www.livecid.in - Husbands sharing their wifes on websites - Kerala in Cultural Disorder - www.livecid.in -

User 1
0
பணத்துக்காக மனைவிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 7 பேரை கோட்டயம் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பின்னால் பெரிய நெட் ஒர்க் இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 



கேரளா மாநிலம் கோட்டயம் அடுத்த கருகாச்சல் காவல் நிலையத்தில் இல்லத்தரசி ஒருவர் அளித்த புகார் அம்மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டஅந்த பெண் அளித்த புகாராவது, எனது கணவர் தன்னை வேறொரு ஆணுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தியதாகவும், இயற்கைக்கு மாறாக உடலுறவு வைத்து துன்புறுத்தியதாகவும் அதில் கூறியிருந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பெண்ணின் கணவர் உட்பட 7 பேர் தங்களது மனைவிகளை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டு உடலுறவில் ஈடுபட்டு வந்ததையும், அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்ததையும் கேட்டறிந்து அதிர்ந்தனர்.

அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் என 7 பேரை கைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், மனைவிகளை மாற்றிக்கொள்ளும் கலாச்சாரத்தில் இவர்களுடன் சேர்ந்து சுமார் 1,000 தம்பதிகள் ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.




இதுகுறித்து கோட்டயம் போலீசார் கூறியதாவது, மனைவிகளை மாற்றிக்கொண்டு இயற்கைக்கு மாறாக உடலுறவில் ஈடுபட்டு வந்த விவகாரத்தில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 25க்கும் மேற்பட்டோர் போலீஸ் கண்காணிப்பில் உள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் மேலும் பலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய கோட்டயம் காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர், ஷேர்சாட், டெலிகிராம், மெசேஞ்சர் போன்ற செயலிகள் மூலம் 'couple sharing' செய்துகொள்ள விரும்புவர்கள் அறிமுகமாகின்றனர். பின்னர் வாட்சப், டெலிகிராமில் தனி குரூப்பை உருவாக்கி அதில் பழகி வருகின்றனர். பின்னர் நேரில் சந்தித்து ஒரு நாளைக்கு அவரவர் மனைவிகளை பரிமாற்றி கொள்கின்றனர். சில நேரங்களில் ஒரு பெண்ணிடம் மூன்று பேர் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். அந்த சூழலில், மனைவியை அனுப்பி வைப்பவர் பேரம் பேசி காசும் வசூலித்துள்ளார். தற்போது கைதாகியிருப்பவர்கள் கேரளாவில் உள்ள மூன்று வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. சமூகத்தின் உயர் மட்டத்தில் உள்ள பலர் இந்த 'couple sharing' குழுவில் அங்கம் வகிப்பதாகவும் அந்த காவல்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்


மேலும், இந்த மனைவிகள் பரிமாற்றக் குழுவில் யாரெல்லாம் ஈடுபட்டுள்ளார்கள்? இந்தக் குழு உறுப்பினர்கள் வேறு ஏதேனும் குழுக்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார்களா என்பது பற்றிய நுணுக்கமான விவரங்களைப் பெற தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் இதேபோல, கடந்த 2019ஆம் ஆண்டு காயங்குளத்தில் மிக பெரிய மனைவி பரிமாற்ற நெட் ஒர்க் பிடிபட்டு பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.www.livecid.in

www.livecid.in
Chief reporter
Prasanth.s

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !