கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் - இளைஞனும் தற்கொலை முயற்சி - இரத்த வெள்ளத்தில் தாம்பரம் இரயில் நிலையம் - Live CID

User2
0
சென்னை புறநகர் பகுதியின் முக்கிய சந்திப்பாக திகழ்கிறது தாம்பரம் ரயில் சந்திப்பு. தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு செல்வதற்கும், சென்னை மாநகர பகுதிக்குள் செல்வதற்கும் தாம்பரம் ரயில் நிலையத்தை பொது மக்கள் பிரதானமாக பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், தாம்பரம் ரயில் நிலையம் நுழைவு வாயிலில் அருகே குரோம்பேட்டை பாரதி நகரை சேர்ந்த சுவேதா என்ற கல்லூரி மாணவி ரயில் நிலையத்திற்குள் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த ஒரு இளைஞர் அந்த மாணவியை திடீரென வழிமறித்து அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் துடித்த அந்த மாணவி சிறிது நேரத்தில் உயிரிழந்தார்


இந்நிலையில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் தன்னைத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுவேதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கழுத்தை அறுத்துக்கொண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இளைஞரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  கல்லூரி மாணவி ஸ்வேதா என்பவரை கத்தியால் குத்திய இளைஞரின் பெயர் ராமு என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கல்லூரி மாணவியை அவர் காதலித்து வந்ததாகவும் ஆனால் அவரது காதலுக்கு ஸ்வேதா மறுப்பு தெரிவித்ததால் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள ரயில் நிலையில் இளம் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஸ்வாதி என்ற இளம்பெண்ணை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

உளவியல் நிபனர்கள் கூறுகையில் காதலை ஒரு போட்டியாக நினைப்பதின் விளைவுதான் இது போன்ற சம்பவம் நடக்க காரணமாக உள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !