திருவள்ளூர் அருகே கிராம நிர்வாக அலுவலர்
பட்டா பெயர் மாற்றத்துக்கு லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்,
திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூர் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் திருமால், இவர் திருவள்ளூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலக சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார்,
அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் தனது தந்தை பெயரில் உள்ள சொத்தினை தனது பெயருக்கு மாற்றம் செய்வதற்காக திருப்பாச்சூர் கிராம நிர்வாக அலுவலர் திருமாலை அணுகி உள்ளார்,
பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர் அவரிடம் கூறியுள்ளார்,
இதனையடுத்து சிலம்பரசன் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் செய்துள்ளனர்,
அவரின் புகாரின் அடிப்படையில் டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான 5 பேர் கொண்ட அதிகாரிகள் ரசாயனம் தடவிய ரூபாய் 5 ஆயிரம் லஞ்ச பணத்தை அவரிடம் கொடுக்க செய்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்,
அதேபோல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு இருந்தபோது கிராம நிர்வாக அலுவலர் ஆதரவாக
மூன்று வழக்கறிஞர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடதக்கது.
வருவாய் துறையில் வாதம் செய்ய ஒரு புறம் வருவாய் ஒரு புறம் ....