திருச்சி மண்ணச்சநல்லூரில் RECHARGE PIT பணியில் பாலையூர் கிராமத்தில் நடந்தேரிய பலே ஊழல்-LIVE CID

Admin
0

திருச்சி மண்ணச்சநல்லூரில் RECHARGE PIT பணியில் பாலையூர் கிராமத்தில் நடந்தேரிய பலே ஊழல்


திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட பாலையூர் கிராமத்தில் நடந்தேரிய பலே ஊழல்.

மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட பாலையூர் ஊராட்சி யில் கசிவு நீர் குட்டை பகுதியில்  Recharge PIT அமைத்தல் பணி மிக மிக மிகவும் அருமையாக உள்ளது என்று மக்கள் மறைமுகமாக திட்டுகின்றன மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தையும் மாவட்ட ஊராட்சி ஒன்றிய AD யையும்.

மக்கள் இப்படி அரசு அதிகாரிகளை திட்டுவதற்க்கு என்ன காரணம் என்று பார்த்தால்  Recharge PIT என்ற திட்டம் 34 ஆயிரம்  மதிப்பில் நிலத்தடி நீரை சேமிப்பத்ற்க்கு மத்திய மாநில அரசின் நிதி மூலம் பாலையூர் ஊராட்சி க்கு மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தால் ஒதுக்கப்பட்டது. இந்த Recharge PIT தற்போது சேதம் அடைந்து பயன் அற்ற நிலையில் உள்ளது.
இப்படி சேதம் அடைய காரணம் என்னவென்று பார்த்தால் வேலையின் தரம் அவ்வாறு உள்ளது.இந்த மோசமான தரத்தில் இருப்பதற்க்கு காரணம் அந்த பகுதி ஊராட்சி செயலர் சண்முகம், மற்றும் BDO Office Engineer,BDO’s என அரசு அதிகாரிகளின் அலட்சிய போக்குதான்.
Recharge PIT சேதம் அடைந்த நிலையில் இருப்பதற்க்கு அந்த பகுதி ஊராட்சி செயலர் சண்முகத்தை கேட்ட பொழுது அவர் சொன பதில் இது சமூக விரோதிகள் செய்த காரியம் என்கிறார்.
Recharge PIT தரம்:
MGNREGS திட்டத்தின் மூலம் 34 ஆயிரம் பணத்தை கிராமம்தானே என்று ஏதோ கடமைக்கு செய்வதை போன்று 1 அடி கூட அடிதளம் இல்லாமல் நேரடியாக செங்கல் வரியை வைத்து சிமென்டை குறைந்து சதுர நிலையில் சிறிய சுவரை கட்டி பெயர் பலகை வைத்துள்ளனர்.
இந்த சுவர் கட்டி முடிக்கப்பட்ட சில நாட்களிளே  சிறிய ஆடுகள் உரசியதில் பெயர் பலகை நொருக்கி விழுந்தது. சதுர கட்டிடம் தரத்தின் குறைவு காரணமாக விரிசல் விட்டு காணப்படுகின்றது. இந்த அளவிற்க்கு பணியின் தரம் உள்ளது.

6 நாட்களில் முடிக்கப்பட்ட வேலை:

MGNREGS திட்டம் 2017-2018
பணி துவக்கிய நாள்  29-11-2018
பணி முடிவற்ற நாள்  05-12-2108
மொத்த நாள                  6 நாள்
பெயர் பலகையில் உள்ளபடி
மனித சக்தி                                     10045 ரூ
பொருட்களுக்கன செலவு       23955 ரூ
மொதம்                                             34000 ரூ
திட்ட மதிப்பு                                   34000 ரூ

பெயர் பலகையில்  உள்ள Toll Free Number 1299 வேலை செய்ய வில்லை.
முக்கியமான ஒன்று பணியின் பெயரை கூட சரியாக எழுதவில்லை RECHAGE PIT என்று உள்ளது பெயர்பலகையில், ஆனல் திட்டதின் பெயர் RECHARGE PIT .(அரசு ஆணை இணைக்கப்பட்டுள்ளது). pdf click : rural_e_ms_7_2018

இந்த பலே உழலை  பாரதிய ஜனதா கட்சி அப்பகுதி கேந்திர பொருப்பாளர் சிவசங்கர் என்பவர் கேள்வி எழுப்புயுள்ளார்.

சேதம் அடைந்த நியலையில் இருக்கும் Recharge PIT  யை சரிசெய்து தருமா மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்த மோசமான செயலில் ஈடுபட்ட ஊராட்சி செயளர் சன்முகம், BDO Office Engineer, வட்டார வளர்ச்சி அலுவலர் என சம்பத்தப்பட்ட அரசு அதிகாரிகளை தண்ட்க்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைந்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?

Reporter Prakash
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !