திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே மளிகை கடையில் சட்ட விரோத ஹான்ஸ் -கடை உரிமையாளர் துணிச்சல்- கஞ்சா??

Admin
0
திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே மளிகை கடையில் சட்ட விரோத ஹான்ஸ் கடை உரிமையாளர் துணிச்சல்- கஞ்சா??

திருச்சி மாவட்டத்திற்க்கு உட்பட்ட முசிறி வட்டத்தில் மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வளர் எல்லைக்கும் புலிவலம் காவல்நிலையத்திற்க்கும் உட்பட்ட திண்ணணூர் என்ற கிரமத்திலும் மற்றும் அதை சுற்றி உள்ள கிரமங்களிலும் உயிரை கொல்லூம் ஹான்ஸ் எனப்படும் புகையிலையை சட்ட விரோதமாக விற்றுவருகின்றனர்.

குறிப்பாக திண்ணணூரில் பள்ளிகூட்த்திற்க்கும் கிராம நிர்வாக அலுவலகத்திற்க்கும்  எதிரில் உள்ள மளிகை கடையில் ஹான்ஸ் எனப்படும் புகையிலையை சட்ட விரோதமாக 5 ரூபாய் பதிப்பு கொண்ட  ஹான்ஸ்யை 30 ரூபாய்க்கு விற்று வருகின்றனர். ஹான்ஸ்யை விற்பது தவறு என்று தெரிந்தும் அதிக விலையை வைத்து வெளிபடையாக விற்கிறார் அந்த மளிகை கடைகாரர். அருகில் பள்ளிகூடம் இருப்பது கூட தெரியாமல் விற்றுவருகிறா அல்லது காவல் துறை அதிகரிகளையும் சுகாதர ஆய்வாளரையும் உடைந்தையாக பயன்படுத்துகிரார என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

இந்த அவலத்தை சமூக ஆர்வளர்கள் யாரவது கேட்டால் எனக்கும் மேல் அதிகாரிகளை தெரியும் என்றும்  அதிகரிகளுக்கு  நான் லஞ்சம்கொடுகின்றேன் என்கிறார் அந்த திண்ண்ணூரில் உள்ள மளிகை கடைகாரர். மற்றும் இதையும் தாண்டி கஞ்சா கூட விற்பேன் அதை கேட்பதற்க்கு நீ யார் என்று மிரட்டுகிறார். கஞ்சவிற்றால் அதிகாரியை நான் பார்த்துகொள்வேன். இப்போது ஹான்ஸ் யை துணிவுடன் விற்கிறேன் இதற்க்கும் அதிகாரியை கவனித்து விட்டேன் என்று கூறுகிரார்.என்பதை பொதுமக்கள் வெளிப்படையாக கூறி செல்கிறார்கள், அவர் சொல்வது போல் காவல்துறையும் சுகாதரதுறையும் துணைநிற்கிறார்கள என்பது கேள்வி குறியாகதான் உள்ளது.

சம்மத்தபட்ட அதிகாரிகள் இந்த கடையையும் மற்றும் அருகில் விற்க்கும் மற்ற கடைகளையும் ஆய்வு செய்வார்களா என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

ஹான்ஸ் எனப்படும் புகையிலையை மெல்லும் பழக்கத்துடன் பலதரப்பட்ட உடல்நல பிரச்சனைகள் தொடர்பில் உள்ளது. அதில் மிக முக்கியமானது தான் புற்றுநோய். அதிலும் வாய், தொண்டை, நாக்கு, கன்னம் மற்றும் உணவுக் குழாய்களில் ஏற்படும் புற்றுநோய்களுக்கு இந்த பழக்கமே முக்கிய காரணமாக விளங்குகிறது. புகையிலை மெல்லும் பலருக்கும் வாயில் புண் மற்றும் சிதைவுகள் ஏற்படுகிறது. இவையனைத்தும் புற்றுநோய் வருவதற்கான அறிகுறியாகும்.

புற்றுநோயை உருவாக்கும்அந்த  மளிகை கடைகாரர்களை மாவட்ட ஆட்சியரும் காவல்துறையும்  கண்டுகொள்வார்களா என பல சமூகாஅர்வளர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றார்கள். உயிரை கொல்லூம் ஹான்ஸ் எனப்படும் புகையிலையை சட்ட விரோதமாக  விற்ற அந்த கடைக்கும் உரிமையாளருக்கும் தகுந்த நடவடிக்கை கொடுத்து தகுந்த தண்டனை கொடுப்பார்களா?????????

Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !