மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கம், மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கம், மற்றும் மாநில வழக்கறிஞர் அணி இணைந்து, திருச்செங்கோடு அருகே குமாரமங்கலத்தில் ஞாயிற்றுக்கிழமை இலவச சட்ட ஆலோசனை முகாம் நடத்தப்பட்டது.
இந்த முகாம், மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கத் தலைவர் டாக்டர் சுரேஷ் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்றது.
முகாமை எலச்சிபாளையம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் செல்வ ராஜ் தொடங்கி வைத்தார். மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தினேஷ் குமார் தலைமையில் முகாம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட இணைச் செயலாளர் கோமதி ஜெயம், திருச்செங்கோடு நகரச் செயலாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்காக நடத்தப்பட்ட இந்த முகாமில், கடன் பிரச்சினைகள், நில–இடம் தொடர்பான சிக்கல்கள், மகளிர் சுய உதவி குழுக்களில் எழும் பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் விரிவான ஆலோசனைகளை பெற்றனர்.
மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் மதன்ராஜ் அவர்கள் முக்கிய விருந்தினராக பங்கேற்று, மக்களுக்கு நேரடியாக சட்ட ஆலோசனைகளை வழங்கினார். மகளிர் சட்ட உரிமைகள் பாதுகாப்பு இயக்கமும் மக்கள் சட்ட உரிமைகள் சமூக சேவை இயக்கமும் இணைந்து நடத்திய இந்த முகாமின் மூலம், பல பொதுமக்கள் பயனடைந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.