கேரளம்’ என பெயர் மாற்ற சட்டப்பேரவையில் தீர்மானம்- livecid.in - livecidtamil - Kerala

User2
0
கேரளம்’ என பெயர் மாற்ற சட்டப்பேரவையில் தீர்மானம்


இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 8-வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை அம்மாநில சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் நேற்று கொண்டுவந்தார்.

தீர்மானத்தை சட்டப்பேரவையில் அறிமுகம் செய்து அவர் பேசியதாவது: மலையாளத்தில் ‘கேரளம்’ என்ற பெயரிலும், பிற மொழிகளில் ‘கேரளா’ என்ற பெயரிலும் நமது மாநிலம் அழைக்கப்படுகிறது. ஆனால், நமது மாநிலத்தின் பெயர் அரசியலமைப்பு சட்டத்தின் முதல் அட்டவணையில் ‘கேரளா’ என்றே எழுதப்பட்டுள்ளது. எனவே, அரசியலமைப்பின் 3-வது பிரிவின்கீழ் இதை ‘கேரளம்’ என்று திருத்தம் செய்து உடனடி பெயர் மாற்றத்துக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு இந்த பேரவை ஒருமனதாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என இடம்பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர், இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
#kerala #keralam #keralagram #keralagodsowncountry #malayalam #mallu #mallugram #keralatourism #malayali #entekeralam #godsowncountry #india #kochi #keraladiaries #keralaattraction #keralagallery #mollywood #love #instagram #photography #malappuram #instagood #kozhikode #kannur #keralaphotography #keralavibes #mumbai #bhfyp #trivandrum #thrissur

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !