கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கலிவரதன், ஆண்டாள் தம்பதியின் மகனான முகஷே் ராஜூ என்பவருக்கும், கிருத்திகா என்பவருக்கும் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முகேஷ் ராஜ் அவிநாசியில் வேலை செய்து வருவதாகவும், அவ்வபோது கிடைக்கும் விடுமுறை நாட்களில் மட்டும் வீட்டிற்கு வந்து செல்வார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மருமகள் கிருத்திகா இரவு நேரத்தில் செல்போன் பேசிக் கொண்டிருந்தார் இதை கண்ட மாமியார் , கிருத்திகாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்து கிருத்திகா தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டில் கழிவறை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஆசிட்டை கிரு்ததிகாவின் முகத்திலும் , பிறப்புறுப்பிலும் ஊற்றியுள்ளார். மேலும் கொசு விரட்ட பயன்படுத்தப்படும் கொசு மருந்தை கிருத்திகாவின் வாயில் ஊற்றியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அலறி துடித்த கிருத்திகாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆசிட் ஊற்றப்பட்டதில் கிருத்திகா ஒரு கண் பார்வையை இழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆண்டாளை கைது செய்துள்ளனர். மாமியார், மருமகள் இடையிலான சிறிய சண்டை ஆசிட்டை ஊற்றி கொலை செய்யும் முயற்சி வரை வரை சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மருமகள் மீது முகத்திலும் பிறப்புறுப்பிலும் ஆசிட் ஊற்றிய மாமியார் - Mother-in-law pours acid on daughter-in-law's face and genitals. - Mathinewstamil - Livecid - Livecid.in
தலைமை முதல் குக்கிராமம் வரை நடக்கும் குற்ற சம்பவங்களின் தொகுப்பை செய்தியாக வெளியிடுவது லைவ் சி ஐ டி www.livecid.in