திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த நாயுடுமங்கலம் கூட்ரோட்டில் பழனி ரங்கநாதன் அரங்கூழ் தெரு கிராமத்தைச் சேர்ந்த இவர் அகரம் சிப்பந்தி கிராமத்தில் அண்ணாமலையார் ஓட்டல் நடத்தி வருகிறார் இவரது ஹோட்டல் பின்புறம்
உள்ள கழிவுநீர் குட்டையில் நேற்று முன்தினம் மாலையில் 37 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கழிவுநீர் குட்டையில் இருந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே குட்டையில் கடந்த பிப்ரவரி மாதம் வாலிபர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் மீண்டும் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Reporter : elumalai
www.livecid.in
Livecid.in Livecid
Crime News Gallery