ஆவடி இரட்டைக்கொலை - போலீசார் திணறல்
சென்னையில் ஆவடி அடுத்த டேங்க் பேக்டரி காவல்நிலைய எல்லைக்குட்பட்டது ஒசிஎப் மைதானம். இங்கு இரவு 12 மணி அளவில் ஆவடி கௌரிபேட்டை மசூதி தெருவைச் சேர்ந்த மீன் வியாபாரி அசாருதீன்(வயது27), ஆவடி வசந்தம் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுந்தர்(வயது 29) இருவரும் சந்தேகத்திற்கு இடமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.ஆவடி காவல் உதவி ஆணையாளர் அலுவலகத்தின் அருகே இந்த கொலை சம்பவம் நடந்திருக்கிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். அசாருதீன், சுந்தர் இருவரும் முகத்தில் வெட்டுப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதாக அசாருதீனின் தந்தை அக்பர் பாஷா ஆவடி போலீஸ் நிலையத்தில் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.இந்த இடத்தில்தான் கொலை செய்யப்பட்டார்களா அல்லது வேறு எங்கேயும் கொலை செய்துவிட்டு உடலை ஆவடி பகுதியில் வந்து சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரேனும் வீசி விட்டுச் சென்றார்களா? இல்லை ஓசிப் மைதானத்தில் தான் இந்த கொலை சம்பவம் நடந்ததா என்ற கோணத்தில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் ஆவடியை சேர்ந்த ஜெகன், யாஸீன் என்ற இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Reporter : Ezhumalai