கண்டக்டர், டிரைவர், கிளீனர் மூவரின் காம இச்சைக்கு பலியான இளம் பெண் - பேருந்தில் சென்ற இளம் பெண்ணுக்கு ??? - மயக்கத்தில் மத்திய பிரதேசம் - Livecid - crime news - livecidtamil
மத்தியப் பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை குக்ஷி நகரில் இருந்து மானவர்களை ஏற்றி கொண்டு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இதில், இளம்பெண் ஒருவர் உட்பட பலர் பயணம் செய்தனர்.
அவர் லாங்சாரியில் இறங்க வேண்டியிருந்தது. டரைவர், கண்டக்டர், கிளீனர் ஆகியோர் அந்த பெண்ணை லாங்சாரியில் இறக்கிவிடவில்லை. அப்போது பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் 'ஏன் அந்த பெண்ணை லாங்சாரியில் இறக்கிவிடவில்லை என்று கேள்வி எழுப்பினர். அப்போது கண்டக்டரும், கிளீனரும், 'அந்த பெண்ணை காந்த்வானியில் இறக்கி விடுகிறோம் என்றனர்.
அதன்பின் அடுத்ததடுத்த ஊர்களை பேருந்து கடந்து சென்றதால் காந்த்வானிக்கு செல்லும் முன் பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளும் அடுத்தடுத்த ஊர்களில் இறங்கிவிட்டனர். அதனால் பேருந்து காலியாக இருந்தது. அந்த பெண் மட்டும் பேருந்தில் இருந்தார். அப்போது குலாட்டி சாலைக்கும் பாலிபூர் சாலைக்கும் இடையே உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் டிரைவர் பேருந்தை நிறுத்தினார்.
பின்னர் அந்தப் பெண்ணை கண்டக்டர் பாலியல் பலாத்காரம் செய்தார். அதன்பின்னர் டிரைவரும், கிளீனரும் அடுத்தடுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். மூவரிடமும் சிக்கிய அந்த பெண் தொடர்ந்து அலறி கூச்சலிட்டதால் அந்த வழியாக சென்றவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அங்கு தனக்கு நேர்ந்த கொடுமையை, ஊர் மக்களிடம் அந்த பெண் தெரிவித்தார். இதையடுத்து தப்பி ஓட முயன்ற கண்டக்டர், டிரைவர், கிளீனர் ஆகிய மூவரையும் பிடித்து போலீசிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். பாலியல் பலாத்காரம் செய்த கண்டக்டர், பலாத்காரம் செய்ய முயன்ற கிளீனர் மற்றும் டிரைவர் ஆகியோர் மீது கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.