இறந்த தாயின் உடலுக்கு மீண்டும் உயிர் வருவதற்காக இரண்டு நாட்களாக ஜெபம் செய்த விசித்திர சகோதரிகள்-கிறிஸ்தவர்களின் நிலை_திருச்சி_ livecid(crime news Gallery)

User 1
0
திருச்சி: தாயின் இறந்த சடலத்தை வீட்டிற்குள் வைத்து, 2 மகள்களும் ஜெபம் செய்து கொண்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.



திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்தவர் மேரி.. 75 வயதாகிறது. இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியை.. சொக்கம்பட்டியில் ஊருக்கு வெளியே தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தார்.

இவருக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள்.. ஜெசிந்தா என்பவருக்கு 43 வயது.. ஜெயந்தி என்பவருக்கு 40 வயதாகிறது.. ஆனால், இருவருக்குமே திருமணமாகவில்லை.

கிறிஸ்தவ மதத்தில் குடும்பமே ஈடுபாடு கொண்டவர்கள்.. இவர்கள் 3 பேருமே ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.. அந்த வீடும் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக இருந்தால், பொதுமக்களுடன் தொடர்பு இல்லாமல் போயிற்று.. 3 பேருமே எந்நேரமும் வீட்டிற்குள் ஜெபம் செய்து கொண்டே இருப்பார்கள். இந்நிலையில் மேரிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது..

இந்த விஷயம் கேள்விப்பட்டு உறவினர் ஒருவர் மேரியை பார்த்து நலம் விசாரிக்க பாண்டிச்சேரியில் இருந்து சொக்கம்பட்டிக்கு வந்துள்ளார்.. மேரியின் வீட்டை விசாரித்து கொண்டு அங்கு சென்றார்.. அப்போதுதான், மேரியின் சடலம் வீட்டிற்குள் கிடந்ததை கண்டு அதிர்ந்தார்.. சடலத்தை நடுவீட்டில் வைத்துவிட்டு, மகள்கள் 2 பேரும் ஜெபம் செய்து கொண்டிருந்தனர்.. இப்படி தொடர்ந்து ஜெபம் செய்தால், இறந்த தாய் மீண்டும் உயிருடன் வந்துவிடுவார் என்றனர்..



இதை கேட்டு அதிர்ந்த அந்த உறவினர், இறந்த சடலத்தை அடக்கம் செய்யலாம், வீட்டிற்குள் வைத்திருக்க கூடாது என்று அறிவுறுத்தி உள்ளார்.. ஆனால், அவரை சகோதரிகள் 2 பேரும் சரமாரியாக திட்டி வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டதாக தெரிகிறது. எனவே, அந்த நபர், ஊருக்குள் சென்று நடந்ததை சொல்லிவிட்டு, சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். பிறகு கிராம மக்கள், மணப்பாறை போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அந்த தகவலின்பேரில் போலீசார் மேரியின் வீட்டுக்கு சென்றனர்.. கதவை தட்டியும் சகோதரிகள் திறக்கவே இல்லை.. பிறகு ஒரு மணி நேரம் கழித்து கதவை திறந்தார்கள்.. அதற்குள் மேரியின் சடலம் அழுகிய நிலையில் இருந்தது.. அந்த சடலத்தின் மீது ஒரு பைபிளை வைத்து ஜெபம் செய்தனர் சகோதரிகள்.. போலீசாரிடம், தங்கள் அம்மா உயிரோடு இருக்கிறார், அவரை அடக்கம் செய்ய விடமுடியாதுஎன்று வாதம் செய்தனர்

இதனால் செய்வதறியாது தவித்த போலீசார், மணப்பாறை வட்டாட்சியருக்கு தகவல் தந்தனர்.. அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் டாக்டர்களுடன் வந்தார்.. மேரியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் உயிருடன் இல்லை என்று சொன்னார்கள்.. அப்போதும் சடலத்தை எடுக்க சகோதரிகள் பிடிவாதம் பிடித்தனர்.. ஒருவழியாக ஆம்புலன்ஸ் மூலம் மேரியின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது..

அப்போதுதான் மேரி இறந்து 7 நாட்கள் ஆகியிருக்கும் என்று டாக்டர்கள் சொன்னார்கள்.. ஆனால், அப்போதும் மேரியின் மகள்கள், டாக்டர்களிடம், தங்கள் அம்மா இறக்கவில்லை, உயிருடன் வந்துவிடுவார் என்று வாக்குவாதம் செய்தனர்.. இறுதியில் போலீசாரும், வருவாய்த் துறையினரும் மேரி எப்படி இறந்தார் என்பதை அறிய அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைக்க முடிவு செய்தார்கள்.. ஆனால், அதற்கும் சகோதரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்..

இரவு 9 மணியில் இருந்து கிட்டத்தட்ட 4 மணி நேரம் சடலத்தை எடுக்கவிடாமல் போராட்டம் செய்தனர்.. இறுதியில் மேரியின் சடலம் போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஜெபம் செய்தால் இறந்தவர்கள் உயிருடன் வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை இன்னமும் பெருகி வருகிறது.. ஒருவாரமாக பிணத்தை வீட்டிற்குள்ளேயே வைத்து ஜெபம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை மணப்பாறை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறது. Livecid.in

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !