கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது - கோவை மாவட்ட காவல் வாட்ஸ்அப் எண் 7708100100 - DAD-Drive Against Drug - Livecid - Crime News Gallery

User2
0
கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது - கோவை மாவட்ட காவல் வாட்ஸ்அப் எண் 7708100100 - DAD-Drive Against Drug - www.livecid.in

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுகா பகுதியில் தடை செய்யப்பட்ட கஞ்சா போதைப் பொருளை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்  செல்வநாகரத்தினம்  அவர்களின் உத்தரவின்பேரில் போதைப்பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கையாக  DAD-Drive Against Drug என்ற பேரில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நடத்திய அதிரடி சோதனையில் அரசாங்கத்தால்  தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த மேட்டுப்பாளையம்* பகுதியைச் சேர்ந்த
 R.பன்னீர்செல்வம்@ நாகராஜ் (வயது-41) மற்றும்
 K. கோபாலகிருஷ்ணன் (21) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் இருவரிடமும் சுமார் 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்து  மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இது போன்ற சட்ட விரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள்  எச்சரித்துள்ளார்.

இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போர்றின் ரகசியங்கள் காக்கப்படும்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !