வேப்பூரில் மருமகன் கழுத்தை நெறித்து கொலை செய்த மாமியார் கைது - காரணம் கள்ளத்தொடர்பு - கடலூர் - Livecid - Livecid ENews

User2
0
வேப்பூரில் மருமகன் கழுத்தை நெறித்து கொலை செய்த மாமியார் கைது  - காரணம் கள்ளத்தொடர்பு - கடலூர் - Livecid - Livecid ENews

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே கழுதூரை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகன் வேல்முருகன் (வயது 27), என்பவருக்கும் வேப்பூர் கிராமத்தை சேர்ந்த  உறவினர் குமுதா  மகள் பவித்ரா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணமானது பவித்ரா தற்போது ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில் பவித்ரா பிரசவத்திற்காக வேப்பூரிலுள்ள தனது அம்மா வீட்டில் தங்கியுள்ளார் கடந்த 28 ம் தேதி மாலை  வேல்முருகன் தனது மனைவியை பார்த்து வருவதாக கூறி வேப்பூரில் உள்ள பவித்ரா அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார் .


அங்கு மனைவியை பார்த்துவிட்டு அங்கேயே தங்கியிருந்த வேல்முருகனுக்கு இரவு 11.45 மணிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதாக அவரது அம்மா மலர்கொடிக்கு தகவல் அளித்தனர் 

தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி வேல்முருகன் அம்மா மலர்கொடி வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்

இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வேல்முருகன் உடலை  பரிசோதனைக்காக   விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,  மருத்துவர்கள் பிரேத பரிசோதனையில் வேல்முருகன் கழுத்தை நெறித்து கொலை செய்யபட்டுள்ளதாக கூறியுள்ளனர்

அதனை தொடர்ந்து திட்டக்குடி டிஎஸ்பி சிவா ஆலோசனையின் பேரில்,  வேப்பூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு, உதவி ஆய்வாளர் சந்திரா ஆகியோர் வேல்முருகன் மனைவி பவித்ரா,  மாமியார் குமுதா ஆகியோரிடம் தனித்தனியே விசாரணை செய்தனர், அப்போது  மாமியார் குமுதா அளித்த வாக்குமூலத்தில், 

மருமகன் வேல்முருகனுக்கும், தனக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும், சம்பவத்தன்று மதுபோதையில் வந்து உல்லாசத்திற்கு அழைத்துள்ளார், மகள் பவித்ரா பக்கத்து அறையில் படுத்திருப்பதால் வேண்டாமென தடுத்துள்ளார் ஆனாலும் மீறி மருமகன் வற்புறுத்தியதால் கழுத்தில் கை வைத்து அழுத்தி தள்ளியதில் இறந்துவிட்டார் பின்னர் புடவை துணியால் கழுத்தில் தூக்கில் மாட்டிவிட்டு தூங்கிய மகளை எழுப்பி உன் கணவர் தூக்குமாட்டி தொங்குகிறார் என கூறினேன்,  நானும் என் மகளும் அவிழ்த்து வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் இறந்துவிட்டதாக கூறினார் என குமுதா தனது வாக்குமூலத்தில் கூறினார்

பின்னர் வேப்பூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு, எஸ்ஐ, சந்திரா ஆகியோர் மருமகனை கொலை செய்த மாமியார் குமுதாவை கைது செய்தனர்

Reporter : Ezhumalai
www.livecid.in - ENews


கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !