2 பெண் ஊராட்சி தலைவர்களின் செக் பவர் பறிப்பு... மாவட்ட ஆட்சியர் சிவராசு அதிரடி - திருச்சி - www.livecid.in - Livecid ENews
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட பிச்சாண்டவர் கோவில் , தீராம்பாளையம் இரு ஊராட்சிகளில் நடந்த அதிகார வரம்பு மீறல்.
பிச்சாண்டவர் கோவில் ஊராட்சியில் ஷோபனா தனது அதிகாரத்தை கனவனிடம் கொடுத்து பல லட்சம் முறைகேடு நடந்துள்ளது. மற்றும் கணவரின் ஆதிக்கம் அதிகமாகி கொண்டு வந்த நிலையில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இதே போன்று தீராம்பாளையம் ஊராட்சியிலும் நடத்து கொண்டிருந்த நிலையில் அங்கிருந்தும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் சென்றது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் சிவராசு அதிரடியாக விசாணை நடத்தி இரு பெண் தலைவர்களின் செக் பவரை ரத்து செய்துள்ளார். ஆதிக்கம் செலுத்திய கணவர்களை கண்டித்து மக்கள் உரிமை கோரிக்கை விடுத்துள்ளனர்.