குற்றத்தை குறைக்க விருதுநகர் போலீஸ் அதிரடி - CCTV - மக்கள் வரவேற்ப்பு - Live CID ENews ,Crime News Gallery

User2
0
குற்றத்தை குறைக்க விருதுநகர் போலீஸ் அதிரடி - CCTV - மக்கள் வரவேற்ப்பு


விருதுநகர் மற்றும்  அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும், அருப்புக்கோட்டை நகர் பகுதிகளான புறவழிச்சாலை நான்கு பகுதிகளிலும் மற்றும் அருப்புக்கோட்டை நகர் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், அமுத லிங்கேஸ்வரர் கோவில் சந்திப்பு, பெரியகடை பஜார், விருதுநகர் செல்லும் சாலை சந்திப்பு, தங்கசாலை தெரு சந்திப்பு, எம்.எஸ். கார்னர் சந்திப்பு, காவல் நிலையங்கள் சந்திப்பு போன்ற பல்வேறு இடங்களில் அதிநவீன புல்லட் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.
சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட இடங்களில் எச்சரிக்கை விளக்குகளும் பொருத்தப்பட்டு உள்ளது. தற்போது சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதால் குற்றச்சம்பவங்களும் வழிப்பறி கொள்ளைகளும் பெரும்பாலும் தடுக்க வகைப்படும்.

மேலும் குற்றவாளிகள் தப்பித்து கொள்ளாமல் இருப்பதற்கும் சிசிடிவி கேமரா பதிவுகள் காவல் துறையின் விசாரணைக்கு உறுதுணையாக இருக்கும். நகர்ப்பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதை பொதுமக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !