சென்னையில் தான் ஒரு உல்பா தீவிரவாதி என கூறி மிரட்டல்|குடியரசு துணை தலைவருக்கு குறி|www.livecid.com|Live CID

Admin
0
சென்னையில் தான் ஒரு உல்பா தீவிரவாதி என கூறி மிரட்டல்|குடியரசு துணை தலைவருக்கு குறி|Live CID
சென்னை அமைந்தகரை பகுதியில் மருத்துவமனை வளாகம் ஒன்றின் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இங்கு அதிக அளவில் வடமாநிலத்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கந்தர்ப்பதாஸ் என்பவர் "தான் ஒரு உல்பா தீவிரவாதி என கூறி மற்றவர்களிடம் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தகவல் கொடுக்கப்பட்டு, பின்னர் அவர் குறித்த விசாரணை நடைபெற்று உள்ளது.
அதன்படி அவர் ஒரு தீவிரவாதியாக இருந்ததற்கான ஆதாரமும் அவர் மீது ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ள தகவலும் கிடைக்கப்பெற்றுள்ளது. பின்னர் இவை குறித்து போலீசாருக்கு கொடுக்கப்பட்ட தகவலை கருத்து கியூ பிரிவு போலீசார் இந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில், கைது செய்யப்பட்ட தீவிரவாதி தனியார் மருத்துவமனையில் 6 மாதம் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த மருத்துவமனையை அடுத்த வாரம் குடியரசு துணை தலைவர் திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் இவர்  கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். ஆறு மாத காலமாக உளவு பார்த்து வந்துள்ளாரா..? இதற்கு பின் ஏதேனும் சதித்திட்டம் உள்ளதா என பல்வேறு கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட தீவிரவாதி உல்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் என்பதை உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கடந்த வாரம் ஸ்ரீலங்காவில் 9 இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பில் 259 நபர்கள் இறந்திருக்கும் நிலையில், சென்னையில் உல்பா தீவிரவாதி ஒருவரை கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தற்ப்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
Detective investigation will continue www.livecid.com 

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !