காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி மீது அவரது மகள் குற்றச்சாட்டு|அதிர்ச்சியில் காவல்துறை|www.livecid.com|Live CID

Admin
0
காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி மீது  அவரது மகள் குற்றச்சாட்டு|அதிர்ச்சியில் காவல்துறை|Live CID


தாய் தந்தையே தன்னை கொடுமை படுத்துவதாக கூறி தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என சி பி சி ஐ டி ஆய்வாளர் மீது விஜயலட்சுமி  மகள் கேண்டி  குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது

என்னுடைய   தாய் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார் என்னுடைய தாயும் தந்தையும் தன்னை வற்புறுத்தி ஒரு வருட காலமாக துபாய் பார் 'ல் ஆட வைத்து பணம் சம்பாதித்து வந்தனர்.

எனக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதால் அங்கிருந்து வெளியேறி  என்னுடைய அண்ணன் வீட்டில் தங்கி இருந்தேன். அப்போது கடந்து 23.04.2019 தேதி அன்று   எனது தாயும் தந்தையும் அடிஆட்களுடன் வந்து அடித்து கொடுமை படுத்தி இழுத்து சென்றதாகவும் இதை கண்ட அப்பகுதி மக்கள் அவர்களிடம் இருந்து தன்னை காப்பாற்றி காவல் நிலையத்தில் ஒப்படைத்து பின்னர் மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

அதுமட்டுமல்லாமல் என்னுடைய அண்ணனின் கடையை தவறான முறையில் அபகரிக்க முயற்சி செய்து வருகின்றனர்.மேலும் என்னுடைய அண்ணியிடம் 10 லட்சம் பணமும் நகையும் வரதட்சணையாக வாங்கி தருமாறு கொலை மிரட்டல் விடுத்தனர். இவை அனைத்தும் தன்னுடைய தாய் காவல் ஆய்வாளர்   என்பதால் அவரை பற்றி எந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும் அதனை அவர்கள் பெரிதாக எடுத்து கொள்ளமால் அவர் மீது நடவடிக்கையும் எடுக்க மறுக்கின்றனர் .

இதனால் தன்னுடைய உயிர்க்கு ஆபத்து இருப்பதால் அவர்களிடம் இருந்து தன்னையும் தனது அண்ணனின் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் .என்று  அவர் கூறினார்.

இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் மிகவும் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது. ஒரு காவல்துறைஅதிகாரி இப்படி நடந்துகொள்வது என்பது மக்கள் மத்தியில் கவால்துறையின் மதிப்பு குறைகிறது. இப்படி அதிகாரத்தை தவறான முறையில் பயன்படுத்தும் அதிகாரிகளுக்கு பாரபட்ச்சம் பார்காமல் தண்டணை கொடுக்குமா நீதிதுறை.

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !