திருவிழாவிற்க்கு சென்ற பக்தர்களில் 7 பேர் பலி | கருப்புசாமி கோவிலில் பரபரப்பு- Live CID

Admin
0

திருவிழாவிற்க்கு சென்ற பக்தர்களில் 7 பேர் பலி | கருப்புசாமி கோவிலில் பரபரப்பு- Live CID

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்து முத்தயம்பாளையம் என்ற கிராமத்தில் ஓம் ஸ்ரீ வாழவைக்கும் வண்டிதுறை கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடந்த கோர சம்பவம் அப்பகுதி மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
7 உயிர் பலியானது 11 பேருக்கு பலத்த காயம், இந்த கோர சம்பவத்தை விரிவாக பார்ப்போம்.

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்து முத்தயம்பாளையம் என்ற கிராமத்தில் உள்ள ஓம் ஸ்ரீ வாழவைக்கும் வண்டிதுறை கருப்புசாமி கோவிலில் வருடவருடமாக சித்திரை மாதம் பெளர்ணமி அன்று புடிகாசு கொடுப்பது வழக்கம். அதே போன்று இந்த வருடமும் புடிகாசு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில்தான் இந்த 7 உயிர் பலியான கோரசம்பவம் அரங்கேரியுள்ளது.
இந்த திருவிழாவிற்க்கு பலாயிரம் மக்கள் வருவார்கள். அதே போன்று இந்த வருடமும் புடிகாசு திருவிழாவிற்க்கும் பலாயிர பக்த்தர்கள் வந்தனர்.
பக்தர்கள் கூட்டத்தை கட்டுபடுத்தமுடியாமல் மக்கள் ஒன்று பின் ஒன்றாக செல்லூம் போது கூட்ட நெரிச்சால் தாக்காமல் ஒருவர் மீது ஒருவர் விழுந்து மூச்சு தினறல் ஏற்ப்பட்டு 7 பேர் சம்பவ இடத்திலே இறந்தனர்.

மற்றும் மீதி 12 பேர் துறையூர் அரசு மருந்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர்.அவர்களுக்கு தொடர் சிகிச்சையானது கொடுக்கப்பட்டநிலையில் 3 பேரின்நிலை மோசமானதால் அந்த மூன்று பேரை உடனே திருச்சி அரசு மருந்துவமணைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மீதம் உள்ள 9 பேரும் துறையூர் அரசு மருந்துவமணைஉள்நோயாளிகளாக மாற்றம் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதிக்கு காவல் துறையினரும் தீயணைப்பு துறையினரும் உடனே விரைந்தனர்.
அதை தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சம்பவஇடத்தை நேரில் ஆய்வு செய்தார். அதன் பின்பு இந்த கோவில் பூசாரியும் நிறுவனரும் தனாபாலை காவல் நிலையம் கொண்டு சென்றனர்.மற்றும் கோவிலுக்கு பூட்டு போட்டனர்.


ஓம் ஸ்ரீ வாழவைக்கும் வண்டிதுறை கருப்புசாமி கோவில் ஒரு பார்வை:

இந்த ஓம் ஸ்ரீ வாழவைக்கும் வண்டிதுறை கருப்புசாமி கோவில் ஆனது சுமார் பந்து வருடமாக இங்கு உள்ளது.இந்த கோவில் இதற்க்கு முன்பு துறையூரை அடுந்து சிங்களாந்தபுரம் என்ற கிராமத்தில் செயல்பட்டு வந்தது. 
அந்த ஊரில் பிரச்சனை ஆனதும் இந்த கிராமத்தை தனபால் அவர்கள் தேர்ந்தெடுந்து ஒரு புதிய கோவிலை உருவாக்கினார். இக்கோவிலை படிபடியாக வளர்ந்து சுமார் 10 வருடம் ஆகிவிட்டது.
இந்த தனபால் என்பவர் இதற்க்கு முன்ப மண்ணச்சநல்லூர் பகுதியில் வசித்து வந்தார்.இவர் தையல்வேலை செய்துகொண்டு இருந்தார் என்பது குறிப்பிடதக்கது. ஒரு தையல்காரர் இன்று கோவிலை கட்டி தான் தான் சாமி என்றும் சித்தர் என்றும் சொல்கிறார்.
இவர் இந்த கோவிலுக்கு வரும் பக்த்தர்களிடம்  அதிகம் பணம் வசூல் செய்வதாகவும் கூறுகின்றனர். அந்த பணத்தை கொண்டு மக்களிடம் செல்வாக்காக செயல்படுகிறார்.

சினிமாபட பாணியில் ஒரு சம்பவம் இங்கு அரங்கேருகிறது அது என்னவென்று பார்த்தோம் என்றால் எஜமான் படம் நம் அனைவருக்கும் நினைவில் இருக்கும் அதில் ஒரு காதபாத்திரத்தில் கதாநயகன் நடந்து செல்லூம் போது அவர் நடந்த பாத மண்ணை மக்கள் நெற்றியில் பூசுவார்கள். அதே போன்று இந்த கோவில் பூசாரி நடக்கும் போது அவர் பாதமண்ணை நெற்றில் பூசுவார்கள் என்பது கொஞ்சம் வேடிக்கையாகதான் உள்ளது.

பல மாவட்டம் வேறு மாநில மக்கள் என பலரும் இந்த இடத்திற்க்கு வந்து செல்கின்றனர்கள். மக்கள் புடிகாசு க்கு ஆசை பட்டு உயிரை விடுவது முட்டாள் தனமாக உள்ளது. இந்த 7 பறிபோன உயிருக்கு கோவில் நிர்வாகம் பொறுப்பு ஏற்க்குமா என்பது அனைவரின் கேள்வியாக உள்ளது. காவல் துறையானது என்ன நடவடிக்கை எடுக்கும் என்று மக்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்கள்.

மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரியநஷ்டயிடும் பாதுகாப்பு கொடுப்பார்களா என்பதும் ஒரு கேள்வி ????

இந்த சம்பவத்தின் பிண்ணணி:

சுமார் பத்து வருடமாக உள்ள கோவிலில் வருடம் வருடம் இந்த புடிகாசு கொடுக்கும் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் எந்த வருடமும் இதுபோன்று சம்பவம் நடைபெறவில்லை. ஆனால் இந்த வருடம் ஒரு கோரசம்பவம் நடைபெற்றுள்ளது .
வருடம் வருடம் போலீஸ் பாதுகாப்பு அதிகமாக வலுவாக இருந்தது. ஆனால் இந்த முறை போலீஸ் பாதுகாப்பானது மிகவும் குறைவு அது ஏன் என்று பார்த்தால் பல காவலர்கள் தேர்தல் பணிக்காக வெளியூர் பயணத்தில் இருந்தனர். இதனாலே பாதுகாப்பு குறைவு.
போலீஸ் ஒரு வேலை அதிகமாக இருந்தால் இந்த நெரிச்சல் ஏற்பட வாய்ப்பில்லை.மற்றும் 7 உயிர் பலி ஆக தேவையில்லை. போக்குவரத்து துறைமூலம் சிறப்பு பேருந்து வருடம் வருடம் அதிகமாக வரும் ஆனால் இந்த வருடம் குறைவு.
முக்கியமாக மக்கள் காவலன் காவல்துறையின் அலச்சிய போக்கும் இந்த சம்பவத்திற்க்கு மிக முக்கிய காரணம்.
இனியாவது பக்தி என்ற பெயரில் உயிரை பலிகொடுக்க வேண்டாம்........


துப்பறியும் விசாரணை தொடரும் www.livecid.com

Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !