தன்னைவிட 28 வயது அதிகமான தொழிலாளியை காதலித்து கரம்பிடித்த பட்டதாரி இளம்பெண் - முதல் மரியாதை திரைப்படம் போன்று ஒரு நகலோ - சீன் காட்டும் சேலம் - livecid

User2
0
தாரமங்கலம் அருகே 54 வயது தொழிலாளியை இளம்பெண் காதலித்து கரம்பிடித்தார். பின்னர் காதல் கணவருடன் பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்தார்.

தாரமங்கலம் அருகே 54 வயது தொழிலாளியை இளம்பெண் காதலித்து கரம்பிடித்தார். பின்னர் காதல் கணவருடன் பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்தார்.


சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள தெசவிளக்கு மாட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 54). தறித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கிருஷ்ணனின் மனைவி தனது மகனை அழைத்து கொண்டு மேச்சேரியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதையடுத்து கிருஷ்ணன் மாட்டையாம்பட்டியில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அவர் அதே பகுதியில் உள்ள தனது உறவினரான அய்யம்பெருமாள் என்பவரது மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது உள்ளிட்டவற்றையும் செய்து வந்தார்.இந்த நிலையில் கிருஷ்ணனுக்கும், அய்யம்பெருமாளின் மகள் விமலா (26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. முதுகலை பட்டதாரியான விமலா ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு வேலை தேடி வந்தார். இது ஒருபுறம் இருக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விமலாவின் தாயார் இறந்து விட்டார். இதையடுத்து கிருஷ்ணன் அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று தேவையான உதவிகளை செய்து வந்தார்.

இதனால் விமலாவுக்கு, கிருஷ்ணன் மீது அதிகளவில் ஈர்ப்பு ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் அது காதலாக மாறியது. காதலுக்கு வயது முக்கியமல்ல என்பதால் தன்னை விட 28 வயது அதிகம் இருந்தும் விமலா, கிருஷ்ணனுடன் பேசி, பழகி வந்தார். இந்த விவகாரம் அய்யம்பெருமாள், அவருடைய 2 மகன்களுக்கு தெரியவரவே அவர்கள் இந்த முறையற்ற காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


இதையடுத்து திருமணம் செய்ய முடிவு செய்த காதல் ஜோடி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி திருவண்ணாமலையில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து நேற்று அய்யம்பெருமாள் தனது மகளை காணவில்லை என தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனை அறிந்த கிருஷ்ணன், விமலா ஆகியோர் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.


இதைத்தொடர்ந்து போலீசார் இளம்பெண்ணின் தந்தை மற்றும் அண்ணன், தம்பியை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தான் காதலித்து கரம்பிடித்த கணவர் கிருஷ்ணனுடன் தான் செல்வேன் என்று விமலா உறுதிபட தெரிவித்தார். பின்னர் விமலாவை காதல் கணவருடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பட்டதாரி இளம்பெண் தன்னை விட 28 வயது அதிகமான நபருடன் காதல் வயப்பட்டு தந்தையின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட ருசிகர சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !