கல்லூரி விடுதி உணவில் பல்லி - மாணவ, மாணவிகள் இமயம் வேளாண் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து போரட்டம் - வளர்ச்சி நிதி என்ற பெயரில் பல லட்சம் - தூங்கும் சுகாதார துறை - திருச்சி - livecid.in - livecidtamil

User2
0
திருச்சி அருகே விடுதியில் உணவு சாப்பிட்ட தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் வாந்தி மற்றும் மயக்கமடைந்த , சம்பவம் அப்பகுதியையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள இமயம் வேளாண் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் , கல்லூரி வளாகத்திற்குள் உள்ள விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் 14.05.2023 மதியம் உண்ட உணவில் பல்லி கிடந்ததாக மூத்த மாணவர்கள் கூறியதையடுத்து அதனை சாப்பிட்ட, மற்ற மாணவர்களும் அதிர்ச்சியடைந்தனர். ஒருவர் பின் ஒருவராக வாந்தி மயக்கம் ஏற்பட்டு விடுதியிலேயே சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இனையடுத்து சில நிமிடங்களிலேயே ஒருவர் பின் ஒருவராக வாந்தி மயக்கம் ஏற்பட்டு விடுதியிலேயே சரிந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கல்லூரி நிர்வாகம் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளை 108 ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்டு பாதிக்கப்பட்ட இமயம் கல்லூரி வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
(ads)
முசிறி டிஎஸ்பி யாஸ்மின் விரைந்து வந்து மாணவ, மாணவிகளுடன் பேச்சுவார்த்தை


கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு எற்பட்டது. தகவல் அறிந்த முசிறி டிஎஸ்பி யாஸ்மின் விரைந்து வந்து மாணவ, மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மருத்துவமனையில் உள்ள மாணவ, மாணவிகளை கல்லூரி நிர்வாகம் கண்டுகொள்ளாததால் தங்களது பெற்றோர்களுக்கு பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் இதுபற்றி தகவல் அளித்தனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் சென்று தங்கள் பிள்ளைகளை நலம் விசாரித்தனர்.

இது பற்றி பெற்றோர் கூறுகையில், இமயம் கல்லூரியில் பிள்ளைகளை படிக்க வைப்பதற்காக வளர்ச்சி நிதி என்ற பெயரில் பல லட்சங்களை பெற்றுக் கொண்டும், கட்டண தொகையாக சில லட்சங்களை பெற்றுக் கொண்டும் தரமில்லாத உணவுகளை கொடுத்து வந்துள்ளனர்.

விடுதியில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை என தங்கள் பிள்ளைகள் அடிக்கடி கூறி வந்ததாகவும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கல்லூரிக்குள் தரமில்லாத உணவு கொடுப்பதைக் கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மாணவர்களின் நலனில் எவ்வித அக்கரையும் கல்லூரி நிர்வாகம் எடுத்துக் கொள்ளவில்லை எனவும் ஆதங்கம் தெரிவித்தனர்.

கல்லூரி விடுதியில் பல்லி விழுந்த உணவை உண்டு கல்லூரி மாணவர்கள் வாந்தி, மயக்கம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுகாதார துறை கல்லூரி நிர்வாகத்தில் இயங்கும் விடுதியை திடீர் ஆய்வு மேற்கொண்டு விடுதியின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.

கல்லூரி விடுதி உணவில் பல்லி - மாணவ, மாணவிகள் இமயம் வேளாண் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து போரட்டம் - வளர்ச்சி நிதி என்ற பெயரில் பல லட்சம் - தூங்கும் சுகாதார துறை - திருச்சி

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !