கோவையில் அடுத்தடுத்து நிகழ்ந்த கொலைகளை அடுத்து ரவுடி செயல்களில் ஈடுபட்ட 33 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டதோடு ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. முன்னதாக கோவையில் கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நீதிமன்ற வளாக அருகே அடுத்தடுத்து 2 கொலை சம்பவம் நிகழ்ந்தது. இதன் காரணமாக கோவை முழுவதும் வாகன தணிக்கை நடத்தி காவல்துறையினர், சந்தேகத்திற்கிடமளிக்கும் வகையில் உள்ளவர்களின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர்.
மேலும் கோவையில் சிறப்பு வாகனத்தணிக்கை, விடுதி தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாநகரின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரௌடி செயல்களில் ஈடுபடும் நபர்களை பற்றின கணக்கு எடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகரில் தெற்கு மற்றும் வடக்கு மாவட்டத்தில் என மொத்தம் கோவை மாநகரில் ரவுடி செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
(ads)
மேலும் 64 வீடுகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி 33 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் கைது நடவடிக்கை தொடரும் என்றும் மாநகர காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவையில் அடுத்தடுத்து 2 கொலைகள் நிகழ்ந்ததையடுத்து காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முன்னதாக
www.livecid.in
Livecid.in Livecid
Crime News Gallery