ஆரணியில் ஆட்டோ திருடியவர் கைது - ஆரணி டவுன் காவல்நிலையம்
ஆரணி ஆரணிப்பாளையம் ஆறுமுகம் தெருவை சேர்ந்தவர் மதி (வயது 57), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன் தினம் இரவு சவாரியை முடித்துவிட்டு ஆட்டோவை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார்.
நேற்று முன் தினம் காலை எழுந்து பார்க்கும் போது ஆட்டோ திருட்டு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் மதி புகார் கொடுத்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்தார். மேலும் ஆட்டோவை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஆரணி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முனுகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வசந்த் (27) என்பவர் ஆட்டோவை ஓட்டி வந்தார்.
அவரிடம் விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தபோது மதியின் ஆட்டோவை திருடியது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
www.livecid.in
Livecid.in Livecid
Crime News Gallery