முதல்வர் வீட்டில் திடீரென வெடித்த துப்பாக்கி.. அதிர்ச்சியில் காவல்துறை.! - கேரளா .livecid - tamilcrimenews - @livecid
கேரளா முதல்வர் பினராயி விஜயனின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் உள்ள காவலர் அறையில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது தவறுதலாக துப்பாக்கி வெடித்துச் சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து விசாரணை நடத்த கேரள காவல்துறை உத்தரவிட்டுள்ளது.கேரள முதல்வர் பினராயி விஜயனின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் இல்லத்தில், 06-12-2012 காலை 9.15 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
காவலாளி அறையில் பணியில் இருந்த ஒரு போலீஸ் அதிகாரியால் துப்பாக்கியை சுத்தம் செய்யும் போது இந்த விபத்து நடந்தது என்றும், இதனால் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
www.livecid.in
Livecid.in Livecid
Crime News Gallery