ஆண்டிபட்டி முன்னாள் தாசில்தார் நாகராஜனுக்கு 2 ஆண்டு சிறை ₹10000 அபராதம் விதித்து தேனி தலைமை குற்றவியல் நீதிபதி கோபிநாதன் தீர்ப்பு - லஞ்சம் வாங்கிய வழக்கில் -livecid - குற்றம்
ஆண்டிபட்டி முன்னாள் தாசில்தார் நாகராஜன் லஞ்சம் வாங்கிய வழக்கில் 2 ஆண்டு சிறைதண்டனையும்,₹10000 அபராதம் விதித்து தேனி தலைமை குற்றவியல் நீதிபதி கோபிநாதன் தீர்ப்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கடந்த 2011 ஆம் ஆண்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தாராக பணிபுரிந்த நாகராஜன் என்பவர் ஆத்தங்கரை பட்டியைச் சேர்ந்த கொத்தான முத்து என்பவர் மகன் சரவணனுக்கு சொத்து மதிப்பீடு சான்றிதழ் ஆவணங்களுடன் சென்றபோது 5000 ரூபாய் கையூட்டு தர வேண்டுமென தாசில்தார் வற்புறுத்தியதன் பேரில் லஞ்ச ஒழிப்பு துறையில் கொத்தான முத்து முறையிட்ட தின் பேரில் 28.7.2011 ஆம் ஆண்டு ரசாயனம் தடவிய 5000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளை லஞ்சமாகக் கொடுத்த போது தாசில்தார் கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்யப்பட்டார் அதன் பேரில் வழக்கு விசாரணை தேனி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நீதிபதி கோபிநாதன் வழக்கு விசாரணை முடிவில் எதிரியை குற்றவாளி என தீர்மானித்து முன்னாள் தாசில்தார் நாகராஜன் என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் அபராத தொகை கட்ட தவறினால் ஒரு மாத மெய் காவல் சிறை தண்டனை விதித்து தலைமை குற்றவியல் நீதிபதி கோபிநாதன் தீர்ப்பு வழங்கினார்.