கழிவறை கூட இல்லாத நக்கசேலம் அரசு மேல்நிலைப்பள்ளி அடிப்படை வசதிகளை செய்யாத பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர்கள் - அதிரடி காட்டுவாரா அன்பில் மகேஷ் பொய்யா மொழி - Livecid - Crime News Gallery

User2
0
கழிவறை கூட இல்லாத நக்கசேலம் அரசு மேல்நிலைப்பள்ளி  அடிப்படை வசதிகளை செய்யாத பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர்கள் - அதிரடி காட்டுவாரா அன்பில் மகேஷ் பொய்யா மொழி - Livecid - Crime News Gallery

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுக்காவிற்க்கு உட்பட்ட நக்கசேலம் ஊராட்சியில் அமைத்துள்ள அரசு மேல்நிலை பள்ளியின் அதீத அவல நிலை. உயர்நிலை பள்ளியில் இருந்து மேல்நிலை பள்ளியாக சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு தரம் உயர்த்தப்பட்டது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளி பெயர் அளவில் மட்டுமே மேல்நிலை பள்ளியாக உள்ளது.

சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கும் பள்ளி கூடத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்பது மிகவும் மோசமான நிலையை காட்டுகிறது.அடிப்படை வசதிகள் இல்லை

  • அடிப்படையான  கழிவறை வசதிகள் இல்லை, 
  • விளையாட்டு மைதானம்  பராமரிப்பு செய்வதில்லை.
  • வகுப்பு அறைகள் சரியான அளவு விகிதம் கிடையாது. நெருக்கடியான சூழலில் கல்வி பயிலும் மாணவ மாணவிகள்.
  • பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளின் மிதி வண்டிகள் நிறுத்த சரியான நிழற்குடை கிடையாது.
  • பள்ளி கட்டிடத்திற்க்கு சுற்று சுவர் கிடையாது.

சிலர் கூறும் கருத்து

கழிவறைகள் மற்றும் சுற்று சுவர் முன்பு இருந்தது ஆனால் தற்போது தான் இல்லை காரணம் நெடுஞ்சாலையின் சாலை அகலம் மேம்படுத்தும் பணியின் காரணமாக இடிக்கப்பட்டது என கூறுகின்றனர்.

அதிகாரிகளின் அலட்சியம்

சாலை அகலப்படுத்தும் பணியில் இடிப்பட்ட  கட்டிடத்தை யார் சரிசெய்வது..
டிஜிட்டல் இந்தியாவில் ஸ்மார்ட் கழிவறை உடனடியாக அமைக்க மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு யோசனை ஏதும் வரவில்லையா....
அரசியல் கூட்டம் கூடும் இடத்திற்க்கு தற்காலிக ஸ்மார்ட் கழிவறை அமைத்து தரும் மாவட்ட நிர்வாகத்திற்க்கு பள்ளி கூடம் பெரிதாக தெரியவில்லையோ...

அடிப்படை வசதிகளை செய்து தராத பெரம்பலூர் மாவட்ட கல்வி அலுவலர்களின் மெத்தன போக்கே இந்த அவல நிலைக்கு காரணமாக அமைகிறது.

பள்ளி தலைமை ஆசிரியர் இந்த அவலநிலையை பல முறை மாவட்ட கல்வி அலுவலர்களிடம் முறையிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.

மாணவ மாணவிகளிடம் கருத்து கேட்டபோது சொல்ல முடியாத வேதனையை அனுபவிற்பதாக கூறுகிறார்கள்.
மருத்துவர்களிடம் கழிவறை வசதி இல்லாத போது மாணவர்கள் எப்படி மன நிலை இருக்கு என கேட்ட போது அவர்கள் கூறுவது சிறுநீரை அடக்க கூடாது சிறுநீர் கழிக்க இடம் இல்லாத போது அவர்கள் சரியாக சிறுநீர் கழிக்க மனநிலை  ஒப்பு கொள்ளாது அது போன்ற நிலையில் உடல் சோர்வு , சிறுநீரக கல் , சூடு உருவாக வாய்ப்பு உள்ளது என கூறுகின்றனர்

பள்ளி கல்வி துறை

தமிழகத்தில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பள்ளி கூடத்திற்க்கு தனி சிறப்பாக ஆய்வு செய்து வரும் நிலையில் தான் இது போன்ற அடிப்படை வசதி கூட இல்லாத பள்ளி கூடத்தில் மாணவர்கள் பயணித்து கொண்டுள்ளனர்.

அடிப்படை வசதியான
  1.  கழிவறை , 
  2. வகுப்பறை விரிவாக்கம் , 
  3. மிதிவண்டி நிழற்குடை, 
  4. விளையாட்டு மைதானம் சரிசெய்தல் , 
  5. சுற்று சுவர்  
சில வசதிகளை அமைத்து தருமா பள்ளி கல்வி துறை.....

இந்த அவல நிலையை ஏற்படுத்திய மாவட்ட கல்வி அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை பாயுமா???

பள்ளிகளுக்கு சென்ற மாணவ மாணவிகளின் நலனை கேட்டு அறிந்து பள்ளிகளை ஆய்வு செய்யும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இந்த பள்ளி கூடத்தை ஆய்வு செய்வார் என Live Cid குழுமம் நம்புகிறோம்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !