தனியார் தொழிற்சாலை ஊழியர் வீட்டில் 80 சவரன் நகை 1-லட்சத்து 9ஆயிரம் கொள்ளை - திருவள்ளூர் - Livecid - Crime News Gallery
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டில் உள்ள தனியார் தொழிற்சாலை ஊழியர் மனோகரன். இவரது மனைவி மீனா. இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று மாலை குடும்பத்துடன் சாய்பாபா கோயிலுக்கு சென்றிருந்தார்.
வீட்டைப் பூட்டி விட்டு அருகிலுள்ள ஜன்னல் அருகில் சாவியை வைத்து விட்டு சென்றுள்ளனர். மீண்டும் இரவு பதினோரு மணி அளவில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந் தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 80 சவரன் நகை. ஒரு லட்சத்து 09 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது . இது குறித்து
மனோகரன் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆவடி உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் ஷீபா வரவழைக்கப்பட்டு வீட்டிலிருந்து கிட்டதட்ட இரண்டு கிலோமீட்டர் வரை ஓடி நின்றது.
இதனையடுத்து காவல்துறையினர் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்
Reporter : Ezhumalai