இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவின்பேரில் சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் சைபர் குற்ற பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் கேரளா பாலக்காடு கரியம்பழா பகுதியை சேர்ந்த முகம்மது சாகிப் உசைன் (25) மற்றும் பாலக்காடு போம்பரா பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் ஜார்ஜ் (25) ஆகிய 2 பேரும் சேர்ந்து ஐஸ்வர்யாவிடம் போலியான முதலீடு நிறுவனத்தின் மூலம் 24, 42, 186/- பணம் மோசடியில் ஈடுபட்டதும், மேலும் இவர்கள் இதுவரை தூத்துக்குடியில் 12 பேரிடம் சுமார் 37 லஞ்சமும் 10 நபர்களின் வங்கி கணக்கை பயன்படுத்தி 3 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது
உடனே போலீசார் முகம்மது சாகிப் உசைன் மற்றும் ஜேம்ஸ் ஜார்ஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.