மனைவியை வெட்டி சாய்த்த கணவன் - 19 வயது இளம் ஜோடி - துடிக்கும் தூத்துக்குடி- Livecid - livecidnews - Tamil Livecid

User2
0
தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்தவர் பொன்ராஜ்(24). இவர் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், தாளமுத்து நகர் பகுதியில் உள்ள பாலதண்டாயுத நகரை சேர்ந்த மாரிசெல்விக்கும்(19) கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன், மனைவி இருவரும் தூத்துக்குடி அண்ணா நகரில் வசித்து வந்தனர். மாரிசெல்வி அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.


இதையடுத்து பொன்ராஜ், மாரியம்மாளுக்கு போன் செய்து ``உங்கள் மகள் என்னுடன் சரியாக குடும்பம் நடத்த மறுக்கிறாள், அடுத்த ஆண்களுடன் போனில் பேசுகிறாள். எனவே அவளை உங்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். நான் அதன்பிறகு வந்து அவளை அழைத்துக் கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார். இதையடுத்து மாரியம்மாள், அண்ணாநகர் சென்று மகளை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனையடுத்து, மகளை அழைத்து செல்லுமாறு மருமகனிடம் மாமியார் கூறியுள்ளார். '

அதற்கு மருமகன் பொன்ராஜ் இனிமேல் உன் மகள் எனக்கு வேண்டாம், அவள் மற்ற ஆணுடன் போனில் தொடர்பு வைத்துள்ளார் என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டார். இந்நிலையில், அதிகாலை தாளமுத்து நகரில் மாமியார் வீட்டிற்கு வந்த பொன்ராஜ் மற்றும் அவரது நண்பர்கள் முத்துக்குமார் (22),  மந்திரமூர்த்தி ஆகியோர் கதவை தட்டி அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பியுள்ளனர். பின்னர் மாரிசெல்வியை வீட்டிற்கு வெளியே அழைத்து வந்த பொன்ராஜ், அவரிடம் பேசுவது போல் நடித்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டினார். :

தலை, கழுத்து, கையில் வெட்டுப்பட்டதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். மேலும் இதனை தடுக்க வந்த மாமியார் மாரியம்மாளுக்கும் கையில் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாரிசெல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தாளமுத்துநகர் போலீசார் வழக்குபதிவு செய்து பொன்ராஜ் உள்ளிட்ட 3 பேரையும் தேடி வந்த நிலையில்  கொலையாளிகளை பிடித்து சிறையில் அடைத்தனர்.

திருமணமாகி 5 மாதமே ஆவதால் தூத்துக்குடி ஆர்டிஓ சிவசுப்பிரமணியன் விசாரணை நடத்தி வருகிறார். 


கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !