திருவள்ளூர் அடுத்த பூண்டி கிராமத்தில் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார் - மயக்கத்தில் காதார துறை - LiveCID - Crime News Gallery

User2
0
திருவள்ளூர் அடுத்த பூண்டி கிராமத்தில் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார் - மயக்கத்தில் காதார துறை - LiveCID - Crime News Gallery 


திருவள்ளூர் அருகே பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்.  இவர் பி.எஸ்.சி வரை மட்டுமே படித்திருப்பதாக கூறப்படுகிறது.  



இந்நிலைில் பூண்டி பஜாரில் ஸ்ரீ மெடிக்கல்ஸ்  என்ற பெயரில் மெடிக்கல் ஷாப் வைத்து நடத்தி வந்துள்ளார்.  மிகவும் பின்தங்கிய கிராமமான பூண்டியில் உடல் நிலை சரியில்லை என்று சொன்னால் மருந்து மாத்திரை தருவதை வாடிக்கையாக்கிய சீனிவாசன்,  காலப் போக்கில் தான் ஒரு மருத்துவர் என்று சொல்லி உடல் நிலை பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு அலோபதி மருத்துவம் பார்த்து மருந்து மாத்திரை வழங்குவதுடன் ஊசியும் போட்டு வந்துள்ளார்.  . இது குறித்த புகாரின் பேரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுகாதாரத் துறையினரால் கைதும் செய்யப்பட்டுள்ளார்.  சிறையிலிருந்து வெளியே வந்த சீனிவாசனம் மீண்டும் அலோபதி மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.  இது குறித்து பூண்டி கிராம மக்கள் திருவள்ளூர்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு கொடுத்த ரகசிய தகவலையடுத்து எஸ்பி  உத்தரவின்பேரில் புல்லரம்பாக்கம் காவல்துறையினர் போலி மருத்துவர் சீனிவாசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சுகாதார துறையினரால் கைது செய்யப்பட்ட இவர் மீண்டும் மருத்துவம் பார்ப்பதை சுகாதார துறை கண்டுகொள்ளாததால் போலி மருத்துவர் தற்போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !