திருவள்ளுர் அடுத்த காக்களூர் மருதி நியூ டவுன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் இவர் அதே பகுதியில் ஜிம் நடத்தி வருகிறார் , அந்த உடற்பயிற்சி மையத்திற்கு அவருடைய மகன் அரவிந்தன் 21 வயது
பயிற்சியாளராக இருந்து வருகிறார்,
அவருடைய ஜிம் -க்கு அதே பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கு அரவிந்தன் பயிற்சி கொடுத்த பின் அவரை தினந்தோறும் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று அவர் வீட்டில் விட்டு விட்டு வருவது வழக்கமாக வைத்திருந்தார்,
அப்போது அந்த இளைஞர் உடைய சகோதரி பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி அவருக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது,
நாளடைவில் அது காதலாக மலர்ந்துள்ளது, கடந்த ஏழு மாதங்களாக அந்த சிறுமியை ஜிம் பயிற்சியாளர் அரவிந்தன் காதலித்து வந்துள்ளார்,
இந்நிலையில் அந்த சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நாள் பார்த்து தன் நடத்திவரும் ஜிம்முக்கு அவரை அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து அவரை மிரட்டி உள்ளார்,
இந்த விவகாரம் சிறுமி வீட்டிற்கு தெரிய வர, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவருடைய பெற்றோர்கள் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் ஜிம் பயிற்சியாளர் அரவிந்தனை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்