சிறைக்கு செல்ல காரணமாக இருந்தவரை பழி தீர்க்க வந்த ரவுடி
சென்னை தண்டையார்பேட்டையில் முன்விரோதம் காரணமாக பெட்ரோல் குண்டு வீசிய ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை திரு வி க நகர் பகுதியை சேர்ந்தவர் மணி என்கிற குள்ளமணி பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் திருவிக நகர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது இந்த நிலையில் தண்டையார்பேட்டை பகுதிக்குட்பட்ட கைலாசம் தெருவில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கடந்த ஜூலை மாதம் வசித்து வந்துள்ளார் அப்பொழுது ஏற்பட்ட தகராறில் மூதாட்டி ஒருவரை வெட்டிய வழக்கில் சிறை சென்றதாக கூறப்படுகிறது இந்நிலையில்
அப்போது பிடித்து கொடுத்துவர்களை பழிவாங்கும் நோக்கில் சிறைக்கு சென்று திரும்பிய நிலையில் இன்று அப்பகுதிக்கு வந்த அவர் பழிவாங்க நினைத்த நபரின் வீட்டிற்கு பெட்ரோல் குண்டு வீச நினைத்து வந்த போது வீட்டை மறந்து பக்கத்து வீட்டில் விசீவிட்டு சென்றுள்ளார்
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாததால் சம்பவம் குறித்து தண்டையார்பேட்டை போலீசார் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடியை தேடி வருகின்றனர்