சிகரெட் கொடுக்க தாமதமானதால் கடையை அடித்து நொறுக்கிவிட்டு, காரில் ஏறி தப்பிக்க முயன்ற திமுகவினரை ஊர் மக்கள் மறித்து தர்மஅடி.
தஞ்சை அருகே உள்ள சூரக்கோட்டையை சேர்ந்தவர் ஆனந்தன் (45). இவர் மன்னார்குடி - பட்டுக்கோட்டை பிரிவு சாலையில் பேக்கிரி கடையும், டீக்கடையும் நடத்தி வருகிறார். ஞாயிறு மாலை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி திமுக 4வது வட்டப் பிரதிநிதி பாண்டவர் (54), மற்றும் அவரது நண்பர்களான திமுக நகர இளைஞரணி அமைப்பாளர், முருகேசன் மற்றும் திமுக நிர்வாகிகளான சுரேஷ் பிரபு, இசையரசன் ஆகியோர் கந்தர்வகோட்டை பகுதியில் நடைபெற்ற கறி விருந்துக்கு சென்று விட்டு மன்னார்குடி பிரிவு சாலையில் இருந்த பெட்டிக்கடையில் சிகரெட் கேட்டுள்ளனர்.
அப்போது கடையில் இருந்த பெண் சிகரெட் கொடுக்க காலதாமதம் செய்ததால் தகராறு செய்துள்ளனர். இதில் ஆத்திரம் அடைந்த 6 பேரும் அங்குள்ள சேர், டீ பாய்லர் ஸ்டாண்டு உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். தகவல் அறிந்த கடையின் முதலாளி ஆனந்தன் சூரக்கோட்டையில் உள்ள ஆட்களுடன் கடைக்கு வந்துள்ளார். அவர்களை கண்டதும் தகராறில் ஈடுபட்ட 6 பேரும் அங்கிருந்து காரில் ஏறி தப்பி செல்ல முயன்றுள்ளனர். அப்போது அவர்களை சுற்று வளைத்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக தலைமை கண்டுக்கொள்ளுமா...
www.livecid.in
Livecid.in Livecid
Crime News Gallery