கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த கணவனை கொலை செய்த மனைவி - கோவை சிறையில் கள்ளக்காதல் ஜோடிகள்- Live CID ENews - Crime News Gallery

User2
0
திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டம் நத்தக்காட்டு வலசு பரஞ்சேர்வழி பகுதியை சேர்ந்தவர் சேகர்(35), காங்கயம் சென்னிமலை ரோடு சகாயபுரத்தில் ஒரு தனியார் தேங்காய் களத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவர் கணவர் மனோகருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகனுடன் ஆலம்பாடியில் ராதாமணி தனியாக வசித்து வருகிறார். 


இந்நிலையில், சேகருக்கும், ராதாமணிக்கும் நட்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து, 2 பேரும் ஒரே வீட்டில் வசித்தனர். இதையறிந்த மனோகர் ஆத்திரமடைந்து ராதாமணியை அழைத்தார். அதற்கு அவர் வர மறுத்ததோடு சேகரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, மனோகர் உயிரோடு இருந்தால் நாம் சந்தோஷமாக இருக்க முடியாது, ஆகையால், அவரை கொலை செய்ய முடிவெடுத்தனர்.

இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி காங்கயம் சென்னிமலை ரோடு குன்னங்கால் பாளையத்திற்கு ராதாமணி மனோகரனை வரவழைத்தார். அப்போது, இருவரும் பேசிக்கொண்டிருந்த போது மறைவாக இருந்த சேகர் இரும்பு கம்பியை எடுத்துவந்து மனோகரனை தாக்கினார். ராதாமணியும் இரும்பு கம்பியால் கணவரை தாக்கியுள்ளார்.இதில், மனோகரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த கொலை சந்தேகத்தின் பேரில் மனைவியிடம் விசாரணை நடத்தியதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர், சேகர், ராதாமணியை போலீஸ் கைது செய்தனர். இந்த வழக்கு தாராபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு 3வது நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கில் 16 பேரை அரசு வழக்கறிஞர் சாட்சியங்களாக விசாரணை நடத்தினார். இதனையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி குமார் சரவணன் வழங்கினார். இதில், சேகருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், ராதாமணிக்கு  ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதனையடுத்து, இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !