பரமக்குடியில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆடு மேயக்கும் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே செவ்வூர் வடக்கு குடியிருப்பை சேர்ந்தவர் திருநாவுக்கரசு(45). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் தஞ்சாவூரில் குடும்பத்துடன் தங்கி ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். இதே பகுதியில் செவ்வூர் தெற்கு குடியிருப்பை சேர்ந்த காயத்ரி(19) என்பவரது குடும்பமும் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தது.
அப்போது, காயத்ரியுடன் (19) திருநாவுக்கரசுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையறிந்த குடும்பத்தினர் காயத்ரியை தஞ்சாவூரில் இருந்து சொந்த ஊரான செவ்வூர் கிராமத்திற்கு அழைத்து வந்துவிட்டனர்.
இந்நிலையில், வீட்டு வேலைக்காக திருநாவுக்கரசு பரமகுடி ,செவ்வூர் கிராமத்திற்கு 23-08-2021 தேதி அன்று வந்தார். அப்போது, அவர் காயத்ரியுடன் தொடர்பு கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. இதையறிந்த காயத்ரின் அண்ணன் அஜித்(24) அவரது சித்தப்பா மகன் சச்சின்(19) ஆகியோர் திருநாவுக்கரசிடம் தகராறு செய்து உருக்கட்டையால் சரமாரியாக தாக்கினார்.
கிராம மக்கள் அவர்களை விலக்கிவிட்டனர். பின்பு திருநாவுக்கரசு தனது சகோதரி வீட்டிற்கு சென்று படுகாயத்துடன் தூக்கச்சென்றார். பின்னர், இரவு நேரமானதும் திருநாவுக்கரசுக்கு மருந்து போடுவதற்காக அவரது சகோதரி எழுப்பினார். அப்போது, அவர் உயிரிழந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக சத்திரக்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் திருநாவுக்கரசு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அஜித், சச்சின் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட நீதிபதி முன்பு இருவரும் சரணடைந்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடைபெற்றதால் அப்பகுதியில் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது.