6 ஆம் வகுப்பு சிறுமியை மாறி மாறி கற்பழித்த 3 காம கொடூரர்கள்-வேலூர் மாவட்டம்-www.livecid.com|LiveCID
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இருக்கிறது மேட்டுப்பாளையம் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் பானு(பெயர் மாற்றப்பட்டுள்ளது).12 வயது சிறுமியான இவர் அந்த பகுதியில் பெற்றோருடன் வசித்து வருகிறார். அங்கிருக்கும் ஒரு பள்ளியில் சிறுமி 6ம் வகுப்பு படிக்கிறார். சிறுமியின் வீட்டில் கழிவறை வசதி இல்லை. குடும்பத்தினர் அனைவரும் இயற்கை உபாதைகளை பாலாற்று கரையோரம் கழித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 6ம் தேதி இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக சிறுமி சென்றார். அப்போது அங்கு அதே பகுதியைச் சேர்ந்த சந்துரு (24). பார்த்திபன் (21), கண்ணன் (30) ஆகிய 3 பேர் மது அருந்தி கொண்டிருந்தனர். சிறுமி தனியாக வந்ததை நோட்டமிட்டு அவரை பின்தொடர்ந்து சென்றனர்.
ஆள்நடமாட்டமில்லாத இடத்தில் வைத்து சிறுமியை மடக்கிய அவர்கள், மறைவான இடத்திற்கு தூக்கி சென்று கற்பழிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சல் போட்டுள்ளார். அவரை பீர் பாட்டிலை உடைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.
பின் சிறுமியை மூன்று வாலிபர்களும் மது போதையுடன் மாறி மாறி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அதை வெளியே யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டவும் செய்துள்ளனர். பயந்துபோன சிறுமி சுடுகாட்டில் பிணத்தின் மீது போற்ற பயன்படுத்திய துணிகளை எடுத்து தன் மீது போற்றிக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். பெற்றோரிடம் அழுதுகொண்டே தனக்கு நடந்த அக்கிரமத்தை சிறுமி கூறியுள்ளார். செய்வதறியாது திகைத்த பெற்றோர் உயிருக்கு பயந்து யாரிடமும் கூறாமல் மறைத்துள்ளனர்.
இதனிடையே தகவலறிந்த சிறுமியின் உறவினர் ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த கொடூரர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என சிறுமியின் பெற்றோரிடம் கூறி காவல்துறையில் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிவு செய்த காவலர்கள் மூன்று வாலிபர்களையும் போக்சோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.