விடுதி காப்பாளரை சரமாரியாக குத்தி கொலை செய்த கல்லூரி மாணவன்-live CID
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே கண்ணனூர் இமயம் வேளாண்மை கல்லூரியில் விடுதி காப்பாளராக பணிபுரிபவர் வெங்கட்ராமன் வயது 45.
இவர் பொள்ளாச்சி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் சுமார் 12 ஆண்டுகளாக அதே கல்லூரியில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
06-11-2019 மதியம் 1.30 மணியளவில் விடுதியில் மதிய உணவு முடித்துவிட்டு கல்லூரியில் இருக்கும் பொழுது அதே கல்லூரியில் படிக்கும் மாணவன் அப்துல் ஹக்கிம் வயது 20 . இவன் பெரம்பலூர் மாவட்டம் குண்ணம் தாலுக்கா கிணத்துகடவை சேர்ந்த அப்துல் ரசாக்கின் மகன் விடுதி காப்பாளரிடம் சென்று என் தந்தையிடம் என்ன சொன்னாய் என்று திட்டி ஆக்ரோசத்துடன் கேட்டுள்ளான் சிறிது நேரத்தில் மாணவன் மறைத்து வைத்த கத்தியால் குத்தி கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டார். காப்பாளர் இரு காயத்தை தாக்க முடியாமல் சம்பவ இடத்திேலே ஒரு மாணவன் கையால் உயிர் இழந்தார். இந்த தகவல் அறிந்த ஜெம்புநாதபுரம் காவல் உதவி ஆய்வாளர் காவலர்களுடன் விரைந்து சம்பவ இடத்தில் உடலை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமணைக்கு அனுப்பி விட்டு கொலையாளியை பிடித்துள்ளனர்