காவு வாங்க காத்திருக்கும் ஆள்துளை கிணறும் அரசு அதிகாரிகளின் அலட்சியமும்-சிறுகனூர் ஊராட்சி - மண்ணச்சநல்லூர் BDO- Live CID

User2
0
காவு வாங்க காத்திருக்கும் ஆள்துளை கிணறும் அரசு அதிகாரிகளின் அலட்சியமும்-சிறுகனூர் ஊராட்சி - மண்ணச்சநல்லூர் BDO- Live CIDதிருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் சிறுகனூர் ஊரட்சிக்குட்பட்ட CR பாளையத்தில் அரசுக்கு சொத்தமான ஆள்துளை கிணறு செயல் அற்ற நிலையில் மூடாமல் உள்ளது.

CR பாளையம் உப்பாற்று பாலம் அருகில் 250 அடி ஆளம் கொண்ட ஆள்துளை கிணறு மூடாமல் திறந்த நிலையில் இருப்பதால் ஏதேனும் உயிரினங்கள் உள்ளே விழுவதற்கு வாய்ப்புள்ளது. மற்றும் சிறு குழந்தைகள் கூட விழுவதற்க்கு அதிகப்படியான வாய்ப்புள்ளது. குறிப்பாக ஆள்துளை கிணறு சாலை ஓரத்தில் இருக்கிறது. அந்த பகுதியில் குழந்தைகள் நடந்து செல்லும் பாதையாகவும் உள்ளது.
இந்த ஆள்துளை கிணறு 250 அடி ஆளத்தை கொண்டு குடிநீர் தேவைக்கும் அருகில் உள்ள     மயான தேவைக்கு பயன்படுத்தப்பட்டது. ஆனால் சிறிது காலமாக அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் அந்த போர் செயல் படமால் திறந்து இருக்கும் நிலையில் இருக்கிறது.
தற்போது பொதுமக்களின் கோரிக்கை அந்த ஆள்துளை கிணற்றில் இருக்கும் தன்னீரை மயான தேவைக்கும் குடிநீர் தேவைக்கும் பயன்படுத்த மோட்டார் வைத்து செயல்படுத்தி தர வேண்டும்.
ஆள்துளை கிணற்றில் தண்ணீர் மேற்பகுதியில் இருப்பது குறிப்பிடதக்கது.


சிறுகனூர் ஊராட்சி செயளர் இதை கண்டுகொள்ளாமல் இருப்பது மக்கள் மத்தியில் கடும் எதிர்பை உண்டாகிறது. இந்த ஆள்துளை கிணற்றை மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக போடப்பட்டது என்பதும் குறிப்பிடதக்கது.

மண்ணச்சநல்லூர் BDO , தாசில்தார் இதனை கண்டுகொள்வார? அலட்சியமாக செயல்படும் ஊராட்சி செயலர், VAO தண்டிக்கப்படுவார்களா? என்பது மக்களின் கேள்வியாக உள்ளது.
ஒரு வேலை சுர்ஜித் போன்ற குழந்தை விழுந்தால் மந்திரி மற்றும் மாவட்ட ஆட்சியர் முதல் தலையாரி வரை அனைத்து அதிகாரிளும் வந்து குவியர்கள்  என மக்கள் கடும் கண்டனத்தை தெரிவிக்கின்றனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !