தூத்துக்குடி மாவட்ட கொலை நிலவரம் - மாவட்ட நிர்வாகம்? - SP - DSP ?|www.livecid.com - Live CID -Exclusive

User2
0
தூத்துக்குடி மாவட்ட கொலை நிலவரம் - மாவட்ட நிர்வாகம்? - SP - DSP ?|www.livecid.com - Live CID -Exclusive

தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக திரு.அருண் பாலகோபாலன் அவர்கள்  பொறுப்பேற்ற (28.6.2019) பிறகு நடைபெற்ற தொடர்  படுகொலை நிகழ்வு விவரங்கள்.

02.7.19 ● தூத்துக்குடியில்  பெண் படுகொலை.

04.7.19 ● குளத்தூரில்  ஆணவப் இரட்டை படுகொலை.

08.7.19 ● விளாத்திகுளத்தில்  ஆசிரியர் படுகொலை.

10.7.19 ● தூத்துக்குடியில்  மீனவர் படுகொலை.

13.7.19 ● தூத்துக்குடியில்  பெண் அடித்துக் கொலை.

15.7.19 ● கயத்தாறில்  மூதாட்டி படுகொலை.

20.7.19 ● தூத்துக்குடியில்  பார் ஊழியர் படுகொலை.

22.7.19 ● குலையன்கரிசலில்  திமுக பிரமுகர் படுகொலை.

28.7.19 ● தூத்துக்குடியில்  இளைஞர் படுகொலை.

31.7.19 ● தென்திருப்பேரையில்  பெண் வெட்டிக்கொலை.

09.8.19 ● கோவில்பட்டியில்  பெண் வெட்டிக்கொலை.

11.8.19 ● முறப்பநாட்டில்  வழக்கறிஞர் படுகொலை.

21.8.19 ● தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் அருகே ஒருவர் படுகொலை.

27.8.19 ● தூத்துக்குடியில்  ரவுடி வெட்டிக்கொலை.

12.9.19 ● வல்லநாட்டில் இளைஞர் படுகொலை.

15.9.19 ● தூத்துக்குடியில் இரட்டை படுகொலை.

16.9.19 ● தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே இளைஞர் படுகொலை.


காய்கறி விலை நிலவரம், தங்கம் வெள்ளி விலை நிலவரம், மழையளவு நிலவரம், கோடை சுற்றுலா கள விவரங்கள்,சிக்கன் மட்டன் விலை நிலவரம்,டீசல் பெட்ரோல் விலை நிலவரம், தினசரி ராசி பலன்கள், பூ விலை நிலவரம் போல் தூத்துக்குடியில் தினசரி கொலை நிலவரங்களை வெளியிடும் நிலையில் தான்  தற்போது  தூத்துக்குடி மாவட்ட காவல்துறை உள்ளது.

சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என ஏட்டில் எழுதி வைத்துள்ள தூத்துக்குடி காவல் துறையினருக்கு மட்டும் தான் தெரியும் அது  பதக்கம் பெறுவதற்கும் பரிசு பெறுவதற்கும் மட்டுமே பயன்படுமென்று... உண்மையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தூத்துக்குடி மாவட்ட காவல்துறை  தவறி வருகிறதா அல்லது தவறிழைத்து வருகிறதா என்கிற சந்தேகம் பொதுமக்களிடம் எழ தொடங்கி விட்டது.

தங்களை யாரும் கேள்வி கேட்க கூடாது, நாங்கள் செய்வதே சரியானது, எங்களுக்கு எல்லாம் தெரியும் என நினைத்து கொண்டு பொருளாதார பெரும் புள்ளிகளோடு தொடர்பை ஏற்படுத்தி கொண்டு உண்மையை மறந்தும் மறுத்தும் செயல்படுவதால் எங்கிருந்து வர போகிறது சரியான செயல் நடைமுறைகள்.

தலைகளை விட்டு விட்டு தறுதலைகளை பிடிப்பதாலும், தும்பை விட்டு துரும்பை கையில் எடுப்பதாலும் எதுவும் மாறி விடப் போவதில்லை. கஞ்சா, போதை விற்பனையாளர்களை, கூலிப்படை தலைவர்களை, ஆயுத கடத்தல் நபர்களை, செயின் பறிப்பு குற்றவாளிகளை, தொடர் திருட்டு குற்றவாளிகளை என ஏய்தவனை விட்டுட்டு ஏவப்பட்ட அம்பினை பெருக்கி எடுப்பதில் எந்த பலனுமில்லை என்பதை எப்போது உணர்வார்கள் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் என்ற கேள்வி எழுகிறது..?

ஆயுத எழுத்துகளுடன்
அக்ரி பரமசிவன்

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !