பெண் அதிகாரிக்கு நடு ரோட்டில் முத்தம் கொடுத்த இளைஞர்கள் - கிரன்பேடி - www.livecid.com |Live CID |liveciddotcom

User2
0
பெண் அதிகாரிக்கு நடு ரோட்டில் முத்தம் கொடுத்த இளைஞர்கள் - கிரன்பேடி - www.livecid.com |Live CID |liveciddotcom


புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்தவர் 23 வயது பெண். மும்பையை சேர்ந்த இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வர்த்தக மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த சம்பவத்தன்று நைட் டியூட்டி முடித்துவிட்டு, வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார் அந்த இளம்பெண் அதிகாரி. அப்போது அவருக்கு பின்னாடியே 2 இளைஞர்கள் பைக்கில் வந்துள்ளனர். அதை அந்த பெண் கவனிக்கவில்லை.

வீட்டுக்கு பக்கத்தில் அந்த பெண் வந்த போது, பைக்கை தெருமுனையிலேயே நிறுத்திவிட்டு அதில் இருந்து ஒருவர் இறங்கி ஓடிச்சென்று திடீரென பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து விட்டு ஓடிவிட்டார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த பெண், அலறி கத்தினார். ஆனால் அந்த நேரத்தில் தெருவில் யாருமே இல்லாததால் பைக்கில் வந்த 2 பேரும் தப்பிவிட்டனர்.

இதையடுத்து, அந்த பெண் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தார். மேலும் ஆளுநர் கிரண்பேடிக்கு வாட்ஸ்அப் மூலம் புகாரை அனுப்பினார்.

அந்த புகாரை அப்போதே படித்த கிரண்பேடி, உடனடியாக போலீசாருக்கு அதிரடி உத்தரவிட்டதன் பேரில் போலீசார் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவிக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது முத்தம் கொடுத்த இளைஞரை ரவுண்டு கட்டி கொஞ்ச நேரத்தில் பிடித்துவிட்டனர். மொட்டத்தோப்பு ரிஷி (19). அவருடன் வந்த 17 வயது நண்பன் ஆகியோர்தான் இந்த செயலில் ஈடுபட்டது என தெரியவந்தது.. ரிஷியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், 'நானும் என் ஃபிரண்டும், தண்ணி அடிச்சிட்டு பைக்கில் வந்துட்டு இருந்தோம். அப்போதான் அந்த பெண்ணை பார்த்தோம். என் நண்பன் என்னிடம், 'அந்த பெண்ணைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க முடியுமா?' என்று பந்தயம் கட்டினார். நானும், 'முத்தம் கொடுத்து, சவாலில் ஜெயித்து காட்டுகிறேன்' என்று சொல்லி, அதன்படியே செய்தேன்" என்றார்.

ரிஷியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !