மனைவியின் கற்பை அடகு வைத்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர்..!(www.livecid.com)livecid.com-live cid dot com
சூதாட்டம் வாழ்க்கையை சூன்யமாக்கி விடும் என்பதற்கு பஞ்சபாண்டவர் காலம் தொட்டே உதாரணங்கள் ஏராளம். மனைவியை கூட அடகு வைத்து சூதாட்டத்தில் தோற்ற கதைகள் பண்டைய காலத்தில் மட்டுமல்ல... இப்போதும் நடந்து வருகிறது என்பதற்கு சமீத்திய உதாரணம் உத்தரபிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம்.
உத்தரபிரதேச மாநிலம், ஜான்புர் மாவட்டத்தில் உள்ள ஜஃபாராபாத் பகுதியை சேர்ந்த ஒருவர், தனது இளம் மனைவி சூதாட்டத்தில் அடகு வைத்துள்ளார். அந்த நபர் எப்போதும் குடியும் குடித்தனமுமாக இருப்பவராம். இவரது நண்பர்கள் அருண், அனில் ஆகியோர் தினமும் இவர் வீட்டுக்கு வந்து மது குடித்து முடிந்ததும் சூதாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். அப்படி ஒருநாள் மது குடித்து முடித்த பிறகு சூதாடி இருக்கிறார்கள். எல்லாவற்றையும் வைத்து தோற்று விட்ட அந்த இளைஞர் தனது மனைவியை வைத்து சூதாடி தோற்றுள்ளார். இதையடுத்து அவரது நண்பர்கள் அருண் மற்றும் அனில் ஆகியோர் தனது மனைவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்துள்ளார். அவர்கள் மூவரும் அந்தப்பெண்ணை மிரட்டி, மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனை சகித்துக் கொள்ள முடியாத அந்தப்பெண் கணவருடன் சண்டை போட்டுவிட்டு தனது தாயார் வீட்டுக்கு கிளம்பி விட்டார். சில மாதங்கள் கழித்து தனது மனைவி ஊருக்கு சென்று மன்னிப்புக் கேட்டுள்ளார். அதை நம்பி அந்தப் பெண்ணும் கணவரின் பேச்சை நம்பி வீடு திரும்பினார்.
கார் பாதி வழியில் வந்துகொண்டிருந்த போதே, தனது நண்பர்களுக்கு போன் செய்துள்ளார் அந்தக் கொடூரக் கணவன். அவர்கள் பாதி வழியில் காரில் ஏறி, உஷாவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தனால் அதிர்ச்சியடைந்த அந்தப்பெண் தன் கணவர், மற்றும் அவரது நண்பர்கள் மீது ஜஃபாராபாத் போலீசில் புகார் செய்தார். அவர்கள் புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து அவர் நீதிமன்றத்துக்குச் சென்றார். நீதிமன்றம் புகாரை பதிவு செய்ய கூறியதை அடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், குமாரையும் அவர் நண்பர்களையும் தேடி வருகின்றனர்.