தலையை வெட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்து வந்த குற்றவாளி..!Livecid.com,(www.livecid.com)
தெலங்கானாவில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்து தலையை துண்டித்து காவல் நிலையத்திற்கு எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், நல்கொண்டாவைச் சேர்ந்தவர் சதாம் (26). இவரால் அவரது உறவினர் பெண் ஒருவர், இரண்டு வருடங்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. சதாம் குடும்பத்திற்கும், தற்கொலை செய்து கொண்ட பெண் குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சதாம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், 4 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் இளைஞரை கொன்று தலையுடன் காவல் நிலையத்திற்கு சென்ற சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.