ஒரே நேரத்தில் 2 காதலிகளையும் திருமணம் செய்து கொண்ட ஆட்டோ டிரைவர்|தாரபுரம் போலீஸ் அதிர்ச்சி|livecid.com(www.livecid.com)

Admin
0
ஒரே நேரத்தில் 2 காதலிகளையும் திருமணம் செய்து கொண்ட ஆட்டோ டிரைவர்|தாரபுரம் போலீஸ் அதிர்ச்சி|livecid.com(www.livecid.com)

தாராபுரம் புதுக்கோட்டைமேடு பகுதியை சேர்ந்த சுந்தரி என்பவர் கடந்த மாதம் 29-ந் முதல் தேதி காணாமல்போய்விட்டார். இது குறித்து அந்த பெண்ணின் தந்தை தாராபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் அந்த பெண்ணை தேடிவந்தனர்.
இந்த நிலையில் காணாமல் போன சுந்திரி  தாராபுரம் பஸ் நிலையத்தில் ஒரு வாலிபருடன் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று அந்த பெண்ணையும், அவருடன் இருந்த வாலிபரையும் மடக்கிப்பிடித்தனர். 
அப்போது அந்த வாலிபருடன் இருந்த மற்றொரு பெண் தன்னையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லுமாறு போலீசாரிடம் கேட்டுக்கொண்டு வாண்ட்டடாக வண்டியில் ஏறிக் கொண்டார்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர் தாராபுரம் புதுக்கோட்டைமேடு பகுதியை சேர்ந்த  சுரேஷ் என்பதும் அவர் ஆட்டோ டிரைவர் என்றும் தெரியவந்தது.  அவருடன் வந்த 2 பெண்களும் அதே பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
திருமணம் ஆகாத ஆட்டோ டிரைவர் சுரேஷ்,  முதலில் அதே பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்த 25 வயது பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அந்த பழக்கம் அவர்களுக்குள் காதலாக மாறியது. 
இந்த காதல் ஒரு புறம் இருக்க மறுபுறம் அதே பகுதியை சேர்ந்த சுந்திரி என்ற  மற்றொரு இளம் பெண்ணுடன் ஆட்டோ டிரைவர் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோ டிரைவரின் , உண்மை நிலை தெரிய வந்தது. 

அதன்பிறகு காதலிகளுக்கு மத்தியில், ஆட்டோ டிவைரை யார் திருமணம் செய்து கொள்வது என்கிற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் ஆட்டோ டிரைவர் தனது காதலிகளை சாமர்த்தியமாக சமாளித்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் ஆட்டோ டிரைவர் தனது காதலிகள் இருவரையும் ஏமாற்றி விட முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதை தெரிந்து கொண்ட 2 பெண்களும் ஒன்று சேர்ந்து ஒரே நேரத்தில் ஆட்டோ டிரைவரை திருமணம் செய்து கொண்டு, அவருடன் ஒன்றாக வாழ்க்கை நடத்துவது என்று முடிவு செய்தனர்.

இந்த முடிவை இருவரும் சேர்ந்து ஆட்டோ டிரைவரிடம் தெரிவித்தபோது அவருக்கு பேரானந்தம் ஏற்பட்டது. உடனே காதலிகளின் ஆசைக்கு சம்மதம் தெரிவித்த ஆட்டோ டிரைவர் பெற்றோர்களுக்கு தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறி பழனிக்கு சென்றனர்.
அங்குள்ள ஒரு கோவில் முன்பு ஒரே நேரத்தில் 2 காதலிகளையும் திருமணம் செய்து கொண்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோவை செல்வதற்காக தாராபுரம் வந்தபோது பஸ்நிலையத்தில் காதலிகளுடன் பிடிப்பட்டது தெரியவந்தது. 
அதையடுத்து போலீசார் காதலர்களின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். பேச்சுவார்த்தையில், 2 பெண்களும் காதல் கணவரான ஆட்டோ டிரைவரருடன் தான் சேர்ந்து வாழ்வோம் என்று பிடிவாதம் பிடித்தனர்.

அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் காதலர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. போலீசார் வேறு வழியின்றி 2 பெண்களையும், காதல் கணவரான ஆட்டோ டிவைருடன் அனுப்பி வைத்தனர். அவர் தனது காதல் மனைவிகளை வீ்ட்டிற்கு அழைத்து சென்றார். 

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !