ஹீரோயின் ஆசை காட்டி, பள்ளி மாணவியை பல மாதம் கற்பழித்த கும்பல்!!டான்ஸ் மாஸ்டரின் லீலை|Live CID

Admin
0

ஹீரோயின் ஆசை காட்டி, பள்ளி மாணவியை பல மாதம்  கற்பழித்த கும்பல்!!டான்ஸ் மாஸ்டரின் லீலை|Live CID


கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் அஜித், இவர் டான்ஸ் மாஸ்டரான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இவர் டான்ஸ் மாஸ்டராக வேலை பார்க்கும் பள்ளியில் நடன பயிற்சிக்காக வந்த மாணவிக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கோவில் திருவிழா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடன நிகழ்ச்சிக்கு சென்று வந்துள்ளனர். 
இந்நிலையில், பயிற்சிக்கு வந்த மாணவி ஷார்மியை உன்னை சினிமாவில் ஹீரோயின் ஆக்குகிறேன் என்றும், தனக்கு பல இயக்குநர்களை தெரியும் எனவும் மாணவியிடம் கப்ஸா விட்டுள்ளார். மாணவி ஷார்மியும் ஹீரோயின் ஆகும் (ஆசை)கனவில் அஜித்குமாருடன் காதல் வயப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 25-ந் தேதி, மாணவியை தொடர்பு கொண்ட அஜித்குமார், இயக்குநர்கள் உன்னை பார்க்க விரும்புவதாக அழைத்துள்ளதாகவும், அதற்கான ஆடிஷன் நடைபெறுவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய மாணவி ஷார்மி அஜித்குமாருடன் திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டணத்திற்கு சென்றுள்ளார் அங்கு ஒரு வீட்டில் தங்கிய அவர் மாணவியுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார் அஜித்குமார்.
பிறகு இது துணை இயக்குநர் வீடு என்றும் அவருடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொள் எனக்கூறி, தனது நண்பருக்கும்  மாணவியை விருந்தாக்கியுள்ளார். பின்னர், அந்த மாணவியை சென்னை அழைத்து சென்ற அவர்கள், உனக்கு சரியாக நடிக்கவரவில்லை எனவும், நீ நாடகங்களில் நடித்து பயிற்சி பெற வேண்டும் என்றும் கூறி மீண்டும் மீண்டும் காயல்பட்டணம் அழைத்து வந்துள்ளனர். மாணவியிடம் அங்குள்ள கலைஞர்கள் அடிக்கடி கட்டாயப்படுத்தி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். 
இந்த சூழலில், தனது மகளை காணவில்லை என மாணவி தாயார், தக்கலை போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக  எந்த துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வந்த நிலையில், அஜித்குமாரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அவரது மனைவி, இதுபற்றி போலீசாருக்கு ரகசிய தகவல் அளித்துள்ளார். இதையடுத்து நடன கலைஞர் அஜித்குமாரின் செல்போன் சிக்னலை  போலீசார், விசாரித்தனர்.
அப்போது, ராஜபாளையம் பகுதியில் கோவில் திருவிழாவில் மாணவியுடன் அஜித், ஆபாச நடனம் ஆடிக்கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார், இருவரையும் மீட்டு மார்த்தாண்டம் மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். ​​அதை தொடர்ந்து, மாணவியை அரசு மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார்,பல முறை கற்பழிப்பு நடந்துள்ளது என்ற ரிப்போர்டின் அடிபடையில், அஜித் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், சினிமா ஆசை காட்டி, பள்ளி மாணவியை சீரழித்த நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !