மண்ணச்சநல்லூர் பேரூராட்சி அவல நிலை- இலவச நவீன கழிப்பிடத்தின் நிலை-Live CID

Admin
0

மண்ணச்சநல்லூர் பேரூராட்சி அவல நிலை இலவச நவீன கழிப்பிடத்தின் நிலை



திருச்சி மாவட்டத்திற்க்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர்  பேரூராட்சி யில் சுத்தம் அற்ற அசுத்த இலவச நவீன கழிப்பிடம்.
எப்ரல் 7 உலக சுகாதார தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தின் முக்கிய அம்சமே சுத்தம் சுகாதாரம் என்பதுதான். மண்ணச்சநல்லூர் பேரூராட்சி வளாகத்தில் உள்ளே இலவச நவீன கழிப்பிடம் உள்ளது. இந்த இலவச நவீன கழிப்பிடம் ஆனது நவீனம் என்ற வார்த்தைக்கு ஒரு துளிகூட சம்மத்தம் இல்லை.

என்னவென்று பார்த்தால் 14 அறையை கொண்ட இலவச நவீன கழிப்பிடத்தில் 10 கழிவறை அறைகள், 3 குழியல் அறைகள் , 1 மோட்டார் அறை உள்ளது.

இதில் 10 கழிவறை அறைகளிலும் தண்ணீர் குழாய் கிடையாது. சுத்தம் கிடையாது, துற்நாற்றம் கொண்ட கழிவறையாக உள்ளது. 3 குழியல் அறைகளில் 2 அறை பூட்டு போட்டபடி துருபிடித்து காணப்படுகிறது. மீதம் உள்ள 1 அறையில் அசுத்தம் நிறைந்து காணப்படுகிறது,இதிலூம் தண்ணீர் குழாய் கிடையாது. மோட்டார் அறையானது மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இந்த இலவச நவீன கழிப்பிடத்தின் அருகில் அக்கன்வாடி  மையம் ஒன்று இருக்கிறது, இந்த அக்கன்வாடி மையத்தின் தனி கழிவறையும் உள்ளது, இந்த கழிவறையானது மிகவும் அசுத்தம் நிறைந்து காணாப்படுகிறது. முக்கியமாக கதவு கிடையாது , தண்னீர் வசதி கிடையாது. இலவச நவீன கழிப்பிடமும்  அக்கன்வாடி மையத்தின் தனி கழிவறையும் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி வளாகத்தின் உள்ளே உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

பேரூராட்சி EO அவர்கள் இதையெள்ளாம் கண்டுகொள்ளாமல் என்ன செய்கிறார் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். தூய்மை இந்தியா என்று சொல்லூம் இதே தேசத்தில் , தூய்மை அற்ற பேரூராட்சி இருப்பது என்பது மிகவும் வேதனை தருகிறது.  
தூய்மை இந்தியா திட்டத்தை  செயல்படுத்தும் அரசு அதிகாரிகளின் வளாகத்தின் உள்ளே இப்படி தூய்மை அற்ற நிலை இருப்பது என்பது மக்கள் மத்தியில் அரசு அதிகாரிகளின் அலச்சியத்தை காட்டுகிறது.

மக்கள் கேள்வி:
இலவச நவீன கழிப்பிடம் இப்படி இருப்பதற்க்கு காரணம் என்ன?
இலவச நவீன கழிப்பிடத்தின் மதிப்பு எவ்வளவு?
இலவச நவீன கழிப்பிடத்தின் தண்ணீர் குழாய் எங்கே?
இலவச நவீன கழிப்பிடத்தின் கழிவு நீர் தேக்க தொட்டி திறந்திருப்பது ஏன்?
பேரூராட்சி EO அவர்கள் என்ன செய்கிறார்? இவருக்கு தண்டணை கிடைக்குமா?

மண்ணச்சநல்லூர்  பேரூராட்சியின் அவலநிலையை கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்? பேரூராட்சியின் AD இதை கண்டுகொள்வார?




ஊழல்வாதிகளின் உண்மை முகத்தை காட்டும்  www.livecid.com


www.livecid.com  துப்பறியும் விசாரணை தொடரும்
Tags

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !