குளித்தலையில் விடிய விடிய மணல் கடத்தல்| மணல் கடத்திய இருசக்கர வாகணம் மோதி ஒருவர் பலி|www.livecid.com|Live CID

Admin
0
குளித்தலையில் விடிய விடிய மணல் கடத்தல்| மணல் கடத்திய இருசக்கர வாகணம்  மோதி ஒருவர் பலி|Live CID


கரூர் மாவட்டத்திற்க்கு உட்பட்ட குளித்தலை யில் விடிய விடிய மணல் கடத்தல் கண்டுகொள்ளாத காவல் துறையும் லஞ்சத்தில் குளிக்கும் வருவாய் துறையும் ஊழலின் உட்சகட்டத்திற்க்கு உறுதுணையாக கரூர் மாவட்ட ஆட்சியர்.

குளித்தலை பகுதியானது காவேரி படுக்கையில் உள்ளது, இங்கு காவேரி ஆற்று பாசனம் அதிகம் மற்றும் மணல் கொள்ளையும் அதிகமாக நடக்கிறது.
மணல் கொள்ளையில் ஒரு உயிர் பலியானது என்பது அதிர்சியாக உள்ளது. நான்கு சக்கர வாகனத்தில் மணல் அள்ள கூடாது என அரசு ஆணைக்கு இணங்க  நான்கு சக்கர வாகனத்தில் மணல் அள்ள வில்லை.
அதையும் மீறி புதிதாக சமூக விரோதி கும்பல் இரு சக்கர வாகணத்தில் மணலை அள்ளி மூட்டை கட்டி திருட்டு தனமாக கடத்தி வந்தனர். இருசக்கர வாகணத்தில் மூட்டை மூட்டையாக கடத்தி ஒரு கும்பலிடம் கொடுகின்றனர்கள். அவர்கள் ஒரு மூட்டைக்கு 100 ரூபாய் என பணம் கொடுகின்றன . இந்த 100 ரூபாய்க்கு ஆசை பட்டு இரவு முழுவதும் மூட்டை மூட்டையாக கடத்துகின்றனர். இப்படி கடத்தும் போது 30.04.2019 அன்று காலை 5 மணியில் இருந்து 6 மணிக்குள்  இரவு முழுவதும் மணல்  கடத்தி, தூக்கத்தில் இருசக்கர வாகணத்தை  ஓட்டி வந்த சமூக விரோதி குட்டம்பட்டி யை சேர்ந்த சன்னாசி(55) வாழை இலையை குளித்தலையில் இரக்கி விட்டு கோட்டமேடு வாய்கால் பாலத்தின் அருகில் சென்ற போது அவர் மீது இடித்து விட்டார் இதனால் சம்பவ இடத்திலே சன்னாசி உயிர் இழந்தார்.

இந்த சம்பவத்தையடுத்து சம்பவ இடத்திற்க்கு   சென்ற குளித்தலை காவல் ஆய்வாளர் பாஸ்கர் தலைமையில் உடலை கையகபடுத்தி விசாரணை செய்துவருகின்றனர்.இந்த கோர சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களின் கருந்து:

மணல் கடத்தல் என்பது அரசு அதிகாரிகளுக்கு தெரிந்தே தான் நடக்கிறது. அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பதாக கூறுகின்றனர்.
மணல் கடத்தல் குற்றம் என்று தெரிந்தும் காவல் துறையும் வருவாய் துறையும் பயந்து போவது ஏன் என்று தெரியவில்லை?
காரணம் அரசியல்வாதிகளா?ரவுடிகளா?

மாவட்ட ஆட்சியர்  இதையெள்ளாம் கண்டுகொள்ளாமல் வெயிலுக்கு கம்மகூழ் வாங்கி கொடுப்பதும், தன்மையாக நடக்கிறேன் என்று சொல்வது மாவட்ட நிர்வாகத்தின் நம்பிக்கையற்ற போக்கை காட்டுகிறது.

இனி எந்த உயிரும் மணல் கொள்ளையில் பலி கொடுக்காமல் மணல் கொள்ளையை காவல் துறையும் ,வருவாய் துறையும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்குமா????????
.

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !