ஊராட்சி செயளர் மற்றும் BDO வின் அலட்சிய போக்கு|மண்ணச்சநல்லூர்|ஒருகிணைந்த மகளிர் சுகாதார வளகத்தின் நிலைமை தூய்மையின் மறுபகுதி|www.livecid.com|Live CID

Admin
0
ஒருகிணைந்த மகளிர் சுகாதார வளகத்தின் நிலைமை தூய்மையின் மறுபகுதி|ஊராட்சி செயளர் மற்றும் BDO வின் அலட்சிய போக்கு|மண்ணச்சநல்லூர்|Live CID

தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்திற்க்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தின் ஒரு கிராமம் தளுதாளப்பட்டி ,இந்த கிராமத்தின் உள்ள ஒருகிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.  ஒருகிணைந்த மகளிர் சுகாதார வளாகம் செயல் இழந்து காணப்படுகிறது. சுமார் 14 அறைகளை கொண்டு  ஒரு தண்ணீர் தொட்டியை கொண்டு மகளிருக்காக கட்டப்பட்ட இந்த சுகாதார வளாகம் இப்போது மிகவும் மோசமான நிலையில் கதவுகள் இல்லாத,தண்ணீர் குழாய் இல்லாத,சுவர்கள் சேதம் அடைந்த நிலையிலும் காணப்படுகிறது. மற்றும் முக்கியமாக இந்த சுகாதார வளாகத்தில் வளாகமுழுவதும் மலம் கலித்து அப்படியே இருப்பது மிகவும் கேவலமாக உள்ளது.
இந்த வளாகத்தில் வெளிபுரத்தை கூட நெருங்க இயலவில்லை அவ்வளவு துற்நாற்றம் வீசுகிறது.

இந்த வளாகத்தை கட்ட சுமார் 4 முதல் 5 லட்சம் செலவு செய்திருக்கும் அரசு , ஆனால் இந்த அரசு கட்டிடம் இப்போது எதற்க்கும் பயன்படவில்லை, இந்த கட்டிடத்தால் அரசு அதிகாரிகளான ஊராட்சி செயளரும் மற்றும் BDO's,ஊராட்சி ஒன்றியத்தில்  சம்மத்தப்பட்ட அதிகாரிகளும் தான். ஏன் என்றால் இந்த கட்டிடத்தை பராமரிப்பு செய்துள்ளனர் 2014-2015 ஆம் ஆண்டு இதற்க்கு 1 லட்சம் செலவு ஆனது.
பராமரிப்பு செய்த கட்டிடத்தின் நிலை இடியும் நிலையில் உள்ளது ,அப்போது அவர்களின் வேலை தரம் எப்படி என்று பாருங்கள்.
வேலையின் தரம் ஒரு கேள்விகுறியாக தான் உள்ளது. ஒரு சிறிய எடுத்து காட்டு 


அந்த  எடுத்து காட்டு என்னவென்று பாருங்கள்  மதிப்பீடு எழுதப்பட்ட இடத்தை பாருங்கள்  பராமரிப்பு செலவானது குறிப்பிடபட்டிருக்கும் . இதன் உள்ளே பாருக்கள் பழைய மதிப்பீடு மற்றும் திட்டம் தெரியும். பெயின்ட் அடிப்பதில் கூட தரம் இல்லை ,அப்போது இவர்கள் செய்த வேலையின் தரம் எப்படி என்பது ????


இந்த வளாகம் இப்படி இருப்பதை பற்றி ஊராட்ச்சி செயளரிடம் கேட்ட போது அவர் இதை பற்றி பேசுவதற்க்கு கூட தயார் இல்லை , எதுவாக இருந்தாலும் BDO விடம் பேசி கொள்ளுங்கள் என்று கூறுகையில் ,கூடவே தண்ணீர் இல்லை அதனால்தான் அந்த வளாகம் இப்படி இருக்கிறது என கூறி சென்று விட்டார்.
இவர் சொல்வதை பார்த்தால் BDO  அவர்கள் எதையும் கண்டு கொள்வதில்லையா இல்லை கண்டுகொள்வது போல் நடிக்கிறார என கேள்வி வருகிறது.
தூய்மை இந்தியா என கூறும் இந்த நாட்டில் கிராமபுறத்தில் இது போன்ற அவல நிலை நீடிக்கிறது.கிராமம் தானே என்று அதிகாரிகள் பகல் கொள்ளை அடிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இப்படி பட்ட அதிகாரிகளின் அலட்ச்சிய போக்கு பொதுமக்கள் மத்தியில் மாவட்ட ஆட்சியர்தான் காரணம் என்றும் தமிழக அரசுதான் காரணம் என்றும் மனதில் பதிகிறது, ஆனால் அப்பகுதி அரசு அதிகாரிகள் தான் காரணம் என்று புரியவில்லை என்பது வருந்தமளிக்கும் செயளாக உள்ளது.இப்படிபட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக தணடணை வழக்க வேண்டும் மாவட்ட நிர்வாகம் .

இந்த வளாகத்தின் வீண் மின்சாரம்:ஒருகிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தின்  இந்த நிலையை காட்டிலும் வளாகத்திற்க்கு மின் இனைப்பு இருக்கிறது . இதில் என்ன கொடுமை என்றால் வளாகத்தில் மின்சார அறையுள்ளது ,அந்த அறையே தற்போது சேதம் அடைந்துள்ளது ஆனால் கூட மின்சார இணைப்பு தடை செய்ய வில்லை. இந்த வளாகத்திற்க்கும் சேர்ந்து மின்வரி அரசு கட்டுகிறது. சேதம் அடைந்த கட்டிடத்தில் மின்சாரம் தாக்கி எவறேனும் உயிரிழந்தால் தான் இதை சரி செய்வார்களா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் சிவராசு அவர்கள் சம்மந்தபட்ட அதிகாரிகளான ஊராட்ச்சி AD,மண்ணச்சநல்லூர் BDO(ராஜேந்திரன்),ஊராட்சி செயளர்  களை தண்டித்து இந்த வளாகத்தை செயல்பட செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்கின்றனர்.Detective investigation will continue www.livecid.com 

கருத்துரையிடுக

0கருத்துகள்

Please Select Embedded Mode To show the Comment System.*

Ads 1

Total views

#buttons=(Accept !) #days=(10)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !